பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உள்ளத்தில் வா
55

ஆசிரியர்: "சிவபெருமானோடு வந்து பொருந்துக' என்கிறார். எந்தக் காலத்தும் சிவத்தினின்றும் பிரிவின்றி நிற்கும் உன்னைத் தனியே அழைத்தல் தகுதியன்று: அப்படித் தனியே நீ வந்தால் பிரிவு பொறாமல் எந்தச் சமயத்திலும் போய்விடக்கூடும். ஆகையால், உன் துணை வருடனே வந்து என் நெஞ்சத்தையே திருக்கட்டிலாகக் கொண்டு வீற்றிருந்தருள வேண்டும்' என்று இரந்து வேண்டுகிறார்.

புனிதரும் நீயும் என் புந்தி எந்
நாளும் பொருந்துகவே.

சிவபெருமானாகிய துணைவரை நினைக்கிறார். அம்பிகையின் திருவடியை எண்ணியவர், சிவபெருமானுடைய திருமுடியைப் பாடுகிறார். அவர் தம் திருமுடியில் கொன்றை மலரையும் சந்திரனையும் பாம்பையும் கங்கையையும் வைத்திருக்கிறார். நெடுஞ்சடையின் மேல் இவற்றைக் கொண்ட புனிதராக அவர் விளங்குகிறார்.

கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த புனிதர்.

கொன்றை சிவபெருமானுடைய அடையாள மாலை: விநாயகர் காப்பிலே, தாரமர் கொன்றையும்' என்று சொன்னார் அல்லவா? அது பிரணவம் போன்ற வடிவுடைமையால் பிரணவ மலர் என்று பெயர் பெறும். பொன்னிறம் பெற்ற அதனை இறைவன் திருமுடியில் கண்ணியாகவும் திருமார்பில் மாலையாகவும் அணிந்திருக்கிறான். தன்னுடைய வார்சடைமேல் திங்களை வைத்திருக்கிறான். சந்திரனுக்கு ஹிமகரன் என்பது ஒரு பெயர், அதனால் பனிதரும் திங்கள் என்றார். சந்திரன் இறைவனுடைய திருமுடியின்மேல் தங்கியதனால் பாவம் நீங்கிப் புனிதம் அடைந்தான் தேயாமல் வளராமல் எப்போதும் பிறை