பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
88

அபிராமி அந்தாதி

திலே அன்புடன் நினைக்கிறான்; திருவிழியாலே பார்க்கிறான். இதை முதலில் ஆசிரியர்'

கருத்தன, எந்தைதன் கண்ணன.

என்கிறார். இறைவனுடைய அருள் நோக்கம் மேவுகின்ற இந்த நிகழ்ச்சியைக் குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் பாடுகிறார்;

   'தார்கொண்ட மணிமுடி ஒருத்தன் திருக்கண்மலர்
சாத்தக் கிளர்ந்துபொங்கித்
   தவிழுமிள வெயிலும்மழ நிலவுமள வளவலால்
தன்ணென்று வெச்சென்றுபொன்
   வார்கொண் டனந்தமுலை மலைவல்லி'

என்று அவர் வருணிக்கின்றார்.

உலகமெங்கும் பெற்ற தாயாகிய அம்பிகையின் நகில்கள் பெரிய உருவினை உடையன; மேருமலை போலப் பொலிவும் திரட்சியும் உடையன. - -

வண்ணக் கணக வெற்பிற் பெருத்தன.

முருகப் பெருமானுக்குப் பாலைக் கறந்து அருத்திய நகில்கள் அவை, இதனை உலகம் அறியாது. ஆனால் உலகம் அறிய அப்பெருமாட்டி அழுத பிள்ளை ஒருவனுக்குப் பாலை அளித்தாள். அழுதுலகை வாழ்வித்த கவுணியர் குலாதித்தனுக்கு, அம்மை பால் அளித்த செய்தி உலகம் அறிந்தது.

'பால் அழும் பிள்ளைக்கு நல்கின.

இத்தகைய திருத்தனபாரம் அருளே வடிவமானவை. இறைவியே அருள் வடிவமானவள். அவள் திருவுருவம் கருணைப் பரப்பானால் அருள் ஊற்றெழும் வாயில் அந்த நகில்கள்.