பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. நீறுடை அழகர்

இது திருச்செம்பொன் பள்ளி என்னும் திருத்தலம்; இப் போது செம்பொளுர் கோயில் என்று வழங்கும். பள்ளி-கோயில். அங்கே எழுந்தருளியுள்ள சிவபெருமானை அப்பர் சுவாமி களோடு சென்று தரிசிக்கலாம். அவர் எம்பெருமானை அடை யாளம் காட்டி நம்மை ஆட்கொள்வார்.

நேரே வந்து பாருங்கள். எம்பெருமானுடைய திருமுடி தெரிகிறதா ? அதை உற்றுப் பாருங்கள். இறைவருடைய சடாபாரத்தில் கங்காநதி இருப்பது தெரிகிறதா ? பகிரதனுக் காக அதை அவர் தாங்கப் புறத்தே போகவிட்டார். தவம் செய்பவர்களுடைய முயற்சிக்கு இரங்கி அருள் பாலிக்கும் பெருங்கருணையாளர் அவர். கங்கையாற்றைக் காணும் போது அவர் அகங்காரத்தை அடக்கிப் பிறருக்கு உபகாரம் பண்ணும் நிலையில் நம்மை வைத்தருளுவார் என்ற எண்ணம் நமக்கு எழ வேண்டும்.

ஆறுடைச் சபையர் போலும்.

எல்லாருக்கும் தனுகரண புவன போகங்களை வழங்கும் வள்ளல் அவர். எல்லா உயிர்களிடத்திலும் அருள் கொண்ட வர் என்ருலும் தமக்கு இவற்றைத் தந்திருக்கிருரே என்பதை நன்றியறிவுடன் நினைந்து அன்பு செய்யும் அடியவர்களிடத் தில் அவர் அதிக அன்பு பாராட்டுவார். தன்னையே சுற்றிச் சுற்றி வரும் இளங் குழந்தையை எடுத்துக் கொஞ்சி முத்த மிடும் தாய் போல நெருங்கிய அன்டர்களிடத்தில் மிகுதியான அன்பைப் பொழிவார்.

அன்பருக்கு அன்பர் போலும்.

அவருடைய அருளே பராசக்தியின் வடிவம். அவர் பாதி, அம்பிகை பாதியாகக் கொண்டு கோலம் காட்டும் பெருமான்