உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

85

ஆனால், எக்காரணத்தாலோ மற்ற நாடுகள், நாகரிகங்கள், மொழிகள் யாவும் பழம்பொருள் ஆராய்ச்சிக்கு மட்டுமே உரியவையாய் விட்டன. அவை அழிந்துவிட்டன. இயற்கையான தளர்ச்சியாலும்

ஆகியிருக்கலாம்-அயல் நாகரிகங்கள்

யெடுப்பினாலும் ஆகியிருக்கலாம். ஆனால், அவற்றைப் பின்பற்றி அவற்றின் பின் ஏற்பட்ட, அவர்களை வென்று அடக்கிய நாகரிகங்கள் அவர்கள் தொடர்பில்லாத வடபுல நாடுகளில் பிந்துற்றன. அவர்கள் தொடர்புடைய தென்பால் நாடுகளில் முந்துற்றன. அதே சமயம் இன்று தென்பால் நாடுகள் தாழ்ந்துள்ளன. வடபால் நாடுகள் உயர்ந்துவிட்டன. தென்பால் நாடுகளுள்ளும் கீழ்ப்பால் நாடுகள் முந்தியிருந்தன. மேற்பால் நாடுகள் பிந்தின. ஆனால் வரவரக் கீழ்ப்பால் தாழ்ந்தது.மேற்பால் உயர்ந்தது. இந்தியாவினுள் தென்பால் நாடுகளும் கீழ்ப்பால் நாடுகளும் வடகோடி நாடுகளும் முந்தியிருந்தன. ஆனால், இவை பிந்துற அணிமைக் காலங்களில் வடபால் முந்தியுள்ளது. மேற்பால் பாகிஸ்தானாகி ஆட்சி ஆதிக்க உரிமை பெற்றுள்ளது.

தமிழகம் உலகப் பரப்புடையது மட்டுமன்று, காலப் பரப்பும் மிகுந்தது.பண்டை மொழிகளுள் எஞ்சியது இது ஒன்றே. இதனிலிருந்து பல தலைமுறை கடந்த மேற்கு ஐரோப்பிய மொழிகள் அதற்குக் கொள்ளுப்பேரன் அல்லது ஏழாம் கொள்ளுப்பேரன் முறையுடையவை. அப் புத்தம் புது மொழிகளுடன் அது இன்றும் வாழ்கிறது - வாழ்வது போதாது, போட்டியிடுதல் வேண்டும் என்றும் நாம் எண்ணுகிறோம். போட்டியிட முடியாமல், வாழமட்டுமே செய்தால்கூட, அது உலக மொழிகளில் மிகுதி உயிர்ப்பண்பும் உள்ளுரமும் உடைய மொழி என்பதில் ஐயமில்லை. உலகின் எல்லா நாகரிகத் தலைமுறைகளிலுள்ள மொழி நாகரிகங்களுடனும் அது தொடர்பு கொண்டு அவற்றைத் தாண்டி இன்றும் வாழ்கிறது.

ம்

தமிழின் தனிச் சிறப்புகளுள் உலகப் பரப்பு, காலப் பரப்பு ஆகிய இவ்விரண்டுமே யன்றி மற்றும் ஒரு தனிச்சிறப்பும் உண்டு. அதுவே உலகின் முதல் முதல் பண்பட்டமொழி-முதல் முதல் இலக்கண இலக்கியமுடைய மொழி, இதற்கு வேறு சான்று வேண்டா. அதன் எழுத்தமைப்பு இன்னும் எல்லா உலக மொழிகளையும் தாண்டி நிற்கின்றது. உயிர் எழுத்து-மெய்