உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”

151

என்று தமிழனுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆயினும் இவ் வடமொழி மூலச் செய்தி அடிக்கடி தமிழன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தலை நீட்டி வருகிறது. அண்மையில் தமிழ்த்துறையில் பெரும் பொறுப்பிலிருந்த பெரியார் ஒருவர் இவ் வடமொழி மூலச் செய்தியைப் பெரிதுபடுத்தி வலியுறுத்தி யதுடன் நில்லாது திருவள்ளுவர், இளங்கோ, சீத்தலைச்சாத்தனார் முதலியவர்களின் காலவரையறையையும் அக்கருத்துக்கேற்ப மாற்ற விழைவதால் இச்செய்தியைத் தமிழன் மீட்டும் ஆராய்ந்து உண்மை எது எனக் காணுதல் இன்றியமையாதது.

ஆனால், இவ்வாராய்ச்சியில் புகுமுன் தமிழர்கள் ஒரு செய்தியை மறவா திருத்தல் வேண்டும். இவ்வாராய்ச்சி முடிபு எதுவாயினும் அது திருவள்ளுவர் பெருமையை ஒரு சிறிதும் அசைத்துவிடாது. வடமொழியிலாயினும் சரி, வேறெம் மொழியிலாயினும் சரி, இதனைப் போன்ற-இதனை யொத்த நூல் திருக் குறளுக்கு முன்னோ, பின்னோ சமகாலத்திலோ (அதாவது முக்காலத்திலும்) கிடையாது என்ற நிலை எல்லாருமொப்ப முடிந்த முடிபேயாகும்.

முதலில் பரிமேலழகர் உரையில் கண்ட செய்திகளை எடுத்துக் கொள்வோம்.

பரிமேலழகர் திருக்குறளை ஒப்புயர்வற்ற முழு முதல் நூல்- அல்லது-முதனூல் என்று கொண்டாரேயன்றி வழி நூல் என்று காண்டார் என்று கூறமுடியாது. குறளாசிரியரை அவர் தெய்வப்புலவர் என்றார். அது வழி நூலானால் அதன் முதனூலாசிரியர்களைத் திருவள்ளுவரை விடச் சிறப்பித்துக் கூறியிருத்தல் வேண்டும். அங்ஙனம் அவர் கூறவில்லை என்பது தெளிவு.

பரிமேலழகர் குறிப்பதெல்லாம் திருக்குறளின் கருத்துகளிற் பல மனுநூல். சாணக்கியர் பொருள்நூல், காமாந்தக நீதி நூல் ஆகியவற்றிற் காணப்படு கின்றன என்பதே. கால ஆராய்ச்சி ஏற்படாத அக்காலத்தில் வடமொழி நூல்கள் எல்லாம் மிகப் பழையன என்று நம்பப்பட்டு வந்தன. அது அக்காலச் சமயக்