தமிழ் முழக்கம்
[243
தமிழரனைவரும் வணங்குகின்றனர். அவர்கள் வணங்காத தெய்வங்கள் கோவில் கொள்ளாத் தெய்வங்கள் - ஆரியத் தெய்வங்கள் மட்டுமே. ஆரியத் தெய்வங்களுள் தலைமையானது. அவர்கள் முழுமுதல் பொருளுக்குப் பிற்றை நாளில் கொண்ட பெயராகிய ‘பிரமம்' என்ற சொல்லுடன் நெருங்கிய தொடர்புடைய பிரமாவேயாவர். இவர் பெயரை ஒட்டித்தான் ஆரிய வகுப்பினர் தம்மைப் 'பிராமணர்' என்றனர். இவரைத் தமிழர் மாபெரும் தெய்வங்களாகிய சிவபிரானுடனும் திருமாலுடனும் சேர்த்து மூவராகச் செய்தும், இந்தியாவில் எவ்வினத்தாரும் அவரை ஏற்றுக் கோவில் கட்டாதது குறிப்பிடத்தக்கது. (ஆரியர்தாம் கோவில் கட்டுபவரல்லரே. கட்டிய கோவிலை- கோவிலின் பொருளைத் தின்று அழிப்பது மட்டும்தானே கோவிலுடன் அவர்களுடைய தொடர்பு!)ஆனால், ஆரியரா இதைக் கண்டு அஞ்சுபவர். மலை மகாதேவனை நாடாவிட்டால், மகாதேவனாவது? மலையை நாடலாமல்லவா? அதுபோல், ஆரியர் தெய்வங்களைத் தமிழர் ஏற்காவிட்டா லென்ன, தமிழர் தெய்வங்களையே ஆரியப் பூச்சுப் பூசிவிடுவோம் என்றனர். அரசரை வஞ்சகத்தால் வென்று ஆண்டவனையும் பணியவைக்கும் ஆற்றலுடையவராயிற்றே ஆரிய மக்கள்!
தமிழ் எழுத்துகள் எல்லாமே தெய்வத்தன்மை உடையவை என்றும் 'ஓம்' என்ற வடிவில் நின்றே எல்லாம் பிறந்துள்ளன என்றும், பேரறிஞர் மாணிக்க நாயக்கர் அருமுயற்சி செய்து காட்டியுள்ளது, ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
இதுகாறும் சமயச் சார்பிலேயே தமிழின் தெய்வத் தன்மையைப் பற்றிக் கூறினோம். சமயவாதிகளுள் பலர் கடவுளைத் தத்தம் முறைப்படி தத்தமக்கு விருப்பமான உருவில் வணங்குவதுடன் நில்லாமல், கடவுளைத் தம் வயமாக்கி, அவர் தமக்கே உரியவர் என வாதாடிவிடுவதுமுண்டு. அத்தகைய சமயவாதிகள், கடவுள் தம் சமயமேயன்றிப் பிற சமயங்களையும், தம்மையேயன்றி மக்களனைவரையும் மக்களேயன்றி உயிர்கள், உயிரற்ற பொருள்களனைத்தையும் படைத்தவர் என்று, தாம் முன்கூறியதையே மறந்து விடுகின்றனர். நல்ல காலமாகத் தமிழரிடை அத்தகைய குறுகிய மனப்பான்மை அருமை. 'எம்மதமும் சம்மதமே' என்ற பொது நோக்கம் மட்டுமன்று;