வருங்காலத் தமிழகம்
55
இருந்தது. இன்று தமிழர் இருண்டகாலங் கழித்து விழிக்கின்றன. அவர்கள் உட்கொள்ள வேண்டிய தாய்ப்பால் எது? மொழி பெயர்ப்பே. உலக அறிவின் அடிப்படையிலேயே தமிழன் எதிர் கால வாழ்வை அமைக்க முடியும். ஆனால் எம் மொழியினின்று மொழி பெயர்ப்பது? உலக அறிவின் திரட்டுப்பாலாய் விளங்கும்? ஆங்கிலத்திலிருந்தும், அடுத்தபடியாக உலக அறிவின் புட்டிப் பால்களாக இயங்கும் பிரஞ்சு, ஜெர்மன் மொழிகளிலிருந்தும், உலக அறிவின் ஊற்றாக நிலவிய கிரேக்க மொழியிலிருந்தும் மட்டுமே. தமிழன் தன் மொழிக்கு அடுத்தபடி இரண்டாம் இடத்தில் வைத்துக் கற்க வேண்டிய மொழிகள் இவையே என்பது மூடாக்கற்ற மதியினர் தெள்ளத் தெளியக் காணக்கூடும் உண்மை. பிரிட்டிஷ் இந்தியாவில் இன்று சுமத்தப்பட்ட ஆங்கிலமும், பிரஞ்சு இந்தியாவில் சுமத்தப்பட்ட பிராஞ்சும் மருத்துவர் கத்தியால் விளையும் நல்வாழ்வைத் தமிழர்க்குத் தரக்கூடும். ஆனால் வடமொழியும் இந்தியும் உருதுவும் போன்ற கீழ்நாட்டு மொழிகள் வெளியுறவுகளுக்குப் பயன்படுமேயன்றித் தமிழன் வாழ்வுக்குத் தாய்ப்பாலாகா. தமிழன் உறக்கக்காலத் தாலாட்டாகவே அவை நிலவக்கூடும்; விழிப்புத் தரும் திருப்பள்ளியெழுச்சிகளாகா.
சுருங்கக்கூறின் தமிழ்நாட்டு இளைஞர்தான் வருங்காலத் தமிழகத்துக்கான திட்டமிடுவதில் முதற்பங்கு கொள்ள வேண்டும். பிற நாட்டவர் அதாவது அயல்நாடுகளாகிய இந்தியப் பரப்பின் பிற பகுதியாளர்களுடன் தமிழன் ஒத்துழைக்கக் கூடும். ஆனால் அவர்களுடன் சரிநிலையில் தன் கருத்தை வலியுறுத்தும் ஆற்றலில்லாதபோது ‘ஒத்துழைப்பு' என்ற சொல்லின் முதற்பகுதி (ஒப்பு) பொருளற்றதாகிவிடும். தமிழரிடை ஒப்புநிலையும் (சமத்துவம்), சரிநிலைவாய்ப்பும், சரி ஒழுங்கும் (சமநீதியும்) ன்றித் தமிழர் ஒற்றுமையோ, இந்திய ஒற்றுமையோ, உலக ஒற்றுமையோ ஏற்பட முடியாது.
இந்திய வாழ்வுக்குத் தமிழர் வாழ்வே அடிப்படையும் உயிர் நிலையும் ஆகும். அவர்களை ஒதுக்கியோ, புறக்கணித்தோ, அடக்கியோ இந்தியா வாழ நினைத்தால், இந்தியா என்றும் உண்மை விடுதலை பெறாது. வடநாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வடநாட்டில் வாழினும், இனவகையில் தமிழர்களே,