உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




|– –

310 ||-

அப்பாத்துரையம் - 10

சூயஸ் திட்டத்தில் அத்திட்ட நிறைவேற்ற மூலம் பழைய ஒருலகையும் புதிய ஓருலகையும் இணைத்தவர் மட்டுமல்லர் அவர். பழைய உலகுக்குரிய சூயஸ் திட்டத்தையும் புதிய உலகுக்குரிய பனாமாத் திட்டத்தையும் உள்ளார நின்றி ணக்கும் தமிழகக் கனவே போல, அவற்றைப் புறநின்றிணைக்கும் ாழ்வாக அவர் வாழ்வு அமைந்துள்ளது. ஆனால் சூயஸ் திட்டத்தில் இன்னல்கள் பலவும் கடந்து அவர் பெற்றது வெற்றி, புகழ் பனாமாத் திட்டத்திலோ அவர் பெற்றது தோல்வி, தோல்வி மேல் தோல்வி, பழி எனினும் இரண்டிலும் அவர் உள்ளார்ந்த பெருமை ஒன்றே ஒன்றில் அவர் உலகின் தோல்விகள் மீது வெற்றி கண்டார்; மற்றதிலோ தன் தோல்வி மீது உலகம் வெற்றி காணும்படி விட்டுச் சென்றார்.

  • * *

பெர்டினாண்ட்டி லெஸெப்ஸ் பிரான்ஸ் நாட்டிலுள்ள வெர்செயில் என்ற நகரில் 1805ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் பிறந்தவர். அவர் குடும்ப மரபு பிரான்சின் உச்ச உயர்தள அரசிய லரங்கத்துக்குரியதுஅவர் தந்தை மாத்யூடி லெஸெப்ஸ் எகிப்தில் பிரஞ்சுத் தூது மனைத் தலைவராயிருந்தார். பாஷா முகமதலி பதவிக்கு வர உதவியவர் அவரேயாதலால், அவருக்கு எகிப்தில் செல்வாக்கும் மதிப்பும் மிகுதியாயிருந்தது.

பெர்டினாண்டின் இளமைக் காலத்தில் எகிப்திய பாஷா முகமதலியின் இளையபுதல்வர் முகமத் சயீத் அவருக்கு தோழராகவும் நண்பராகவும் இருந்தார்.அவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்த நட்பு நீடித்தது சூயஸ் திட்டத்திலே இருவர் புகழும் இணைமலராகப் பிற்காலத்தில் பின்னி வளர்ந்தது. இளவரசர் நட்பு அவருக்குத் தந்த மதிப்பைவிட,அவர் இனிய தோற்றமும், நடையும், திறமையும், நய நாகரிகமும் அவருக்கு மிகுதியான புகழும் மதிப்பும் தந்தன. அவர் குதிரை ஏற்றத்திலும் கேளிக்கைகளிலும் வல்லவராக விளங்கினார். அவர் பேச்சுக்கள் எல்லோரையும் கவர்ந்தன. எகிப்தியரிடையேயும் ரோப்பியரிடையேயும் ளமையிலேயே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.

எகிப்திலேயே துணைத் தூதுவராகச் சில காலம் இருந்த பின் அவர் மார்ரிக் மாநகரில் அமைச்சராகப் பதவி பெற்றார்.