உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




314

அப்பாத்துரையம் – 10

பாஷாவும் அம்மேலுரிமையை மதிக்கத் தவறவில்லை. திட்ட உரிமை முழு விரிவுடன் வகுக்கப்பட்ட பின்னும், துருக்கி சுல்தான் ஏற்பிசைவு பெற்ற பின்னரே வேலை தொடங்க வேண்டுமென்றும் கழகம் அமைக்க உதவுவதற்காக மட்டுமே,பத்திரத்தின் கைப்படியை அனுப்புவதாகவும் பாஷா லெஸெப்ஸுக்குத் தெரிவித்திருந்தார்.

முழு உலகக் கழகம் அமைப்பதற்கான முன்னேற்பாடாகப்

பாஷா ஒரு சர்வதேசக்குழு அமைத்தார். அவ்வமைப்புக்காக 1855 அக்டோபரில் பாரிஸிலுள்ள லெஸெப்ஸின் மாளிகையிலேயே பல நாடுகளிலிருந்தும் பல்துறை வல்லுநர்கள் வரவழைக்கப் பட்டிருந் தனர். அவர்களிடையேதான் சர்வதேச குழு வகுக்கப் பட்டது. எகிப்துக்குச் சென்று திட்ட நிலக்கிடப்பும் சூழலும் நேரிலேயே பார்வையிட்டு ஆய்வுரை கூற ஒரு துணைக் குழுவும் ங்கேயே அமர்த்தப்பட்டது. அதன் செலவுக்காகச் சர்வதேசக்குழு வரையறுத்த 60,000 பிரஞ்சு வெள்ளிகளையும் பாஷா தம் பெறுப்பிலேற்றுத் திட்டத்தை மனமார ஊக்கினார்.

துணைக்குழு ஜூன் முதல் நாள் தன் அறிக்கையை வழங்கிற்று. கடற்கால் வெட்டுவதற்கு 20 கோடி பிரஞ்சு வெள்ளிகள் செலவாகு மென்று குழு மதிப்பிட்டது. பாஷா அறிக்கையை ஏற்று, திட்ட முன்னேற்பாடுகளிலும் கூட்டுக்கழக அமைப்பிலும் லெஸெப்ஸை ஈடுபடுத்தினார்.

திட்டத்தின் கருப்படிவத்தை உருவாக்க லெஸெப்ஸூக்கு உதவிய துணைவர்கள் காலிஸ் பே, மோகல் பே என்ற பொறிவ லாளர்கள். முந்திய தலைமுறையில் வாக்ஹார்னின் நண்பரான லினன்ட்பே உருவாக்கிய திட்டமே அவர்களுக்கு அடிப்படை அமைப்பாயிற்று. அதன்படி கடற்கால் செங்கடலில் சூயஸ் துறை அருகிலிருந்து புறப்பட்டது. அது திமாஷ் ஏரி,கைப்பேரி (Biter lake) ஆகியவற்றினூடாகவும் மென்சாலா ஏரி அருகாக அதைச் சுற்றியும், செல்வதாகத் திட்டமிடப்பட்டது.நடுநிலக்கடல் முகப்பு பெலூஸியம் குடாவருகில் முடிவதாயிருந்தது. ஆனால் வல்லுநர்கள் அறிவுரை மீது 1855லேயே து ல் இரண்டு மாறுதல்கள் செய்யப்பட்டன.

தில்

நடுநிலக் கடற்கரையில் வளைகுடாப் பகுதியைவிட அதற்கு 172கல் மேற்கிலுள்ள பகுதி கரையருகிலேயே மிகவும் ஆழமுடைய தாயிருந்தது. நடுநிலக் கடல் முகப்பு இங்கேயே அமைவது நலம்