உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(320

||__

அப்பாத்துரையம் – 10

சூயஸ் திட்ட வேலையின் தொடக்க விழா 1859ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் நாள் நடைபெற்றது. நடுநிலக் கடலையடுத்து ஓர் இடம் வேலை தொடங்கும் பகுதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. அவ்விடத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர், கழகப் பணியாளர், பொறிவலாளர், அரசியல் பணியாளர் வந்து குழுமினர். அவர்கள் அனைவரின் ஆரவார வாழ்த்தொலிகளுக் கிடையே லெஸெப்ஸ் தாமே மண்வெட்டியேந்தி, முதன் முதலாக ஒரு கூடை மண்ணைவெட்டி அப்புறப்படுத்தினார்.

இது வேலை தொடங்குவதற்குரிய சமிக்கையாகிற்று. துமுதல் நாள்தோறும் வேலை தொடர்ந்து நடைபெற்றது.

எகிப்திய அரசியலாரின் பெருமுயற்சியால் 60,000க்கும் மேற்பட்ட தொழிலாளர் இப்பெரும் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். அவர்ளில் எகிப்தியர் மட்டுமின்றி, அராபியர், நூபியர்,கிரேக்கர்,நீகிரோவர், தொலைவிலுள்ள சிசிலித் தீவினர் ஆகிய பல்வேறு நாட்டு மக்கள் இருந்தனர். பாலைவனமாகக் கிடந்த கடலிணைப்புப் பகுதியிலே அவர்கள் பகலெல்லாம் புற்றிலிருந்து புறப்பட்டுச் செல்லும் எறும்புகள் போல் சாரிசாரியாகத் திரிந்து பணியாற்றினர். இரவில்கூட அவர்களுக்காக வரிசை வரிசையாக எழுப்பப்பட்டிருந்த தங்கல் தளங்கள் உயிரற்ற பாலைவன வாழ்வுக்கு உயிர்கொடுத்தன.

மனித உலகம் 18ஆம் நூற்றாண்டிலேயே இயந்திர ஊழியை எட்டிப் பிடித்திருந்தது. ஆகவே விரைந்த பேரளவான வேலைப் பாடுகள் 19ஆம் நூற்றாண்டுக்கு ஒரு சிறிதும் புதிதல்ல. ஆயினும் இயந்திர ஊழிக்கு முன்னும் சரி, அவ்வூழியிலும் சரி - சூயஸ் கடற்கால் திட்டத்தை ஒத்த பார் அளவான வேலைப்பாட்டை உலகம் அதற்கு முன் கண்டதில்லை என்றே கூறலாம். உண்மையில் எகிப்தின் பாரகோபுரங்களையும் சீனத்தின் நெடுமதிலையும் மட்டுமே அதனோடொத்த மக்கட் பெருஞ் செயல்கள் என்று கூறத்தகும். ஆனால் பயனிலும் நிலைத்த வளத்திலும் சூயஸ் கடற்கால் அவற்றைப் பன்மடங்கு மிஞ்சியது என்பதில் ஐயமில்லை.

கடற்கால் கடலுக்குக் கடல் ஏறத்தாழ 100 கல் நீளமுடையதாயிருந்தது. இந்த முழு நீளத்திலும் பெரிய கப்பல்கள் செல்லும் அளவாக ஆழ அகலமுடைய கடல் போன்ற கால்வாய்