உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

379

பாரப்பொறிகள் ஏற்படாத அந்நாட்களில் இப்பகுதி முற்றிலும் இருப்புப் பாதைகள் வண்டிப் பாதைகள் ஆகியவற்றின் ஒரு பின்னால் வலையாக காட்சி தந்தது. புற்றைச் சுற்றிலும் பரபரப்புடன் திரித்து மொய்க்கும் எறும்புகள் போலத் தொழிலாளர்களின் நடமாட்டம் அமைந்திருந்தது.

பிளவு வேலை பல ஆண்டுகள் நீடித்தது. 1908 லேயே அது உச்சநிலை அடைந்தது. அவ்வாண்டில் மட்டும் 370 இலட்சம் மண்ணும் பாறையும் அகற்றப்பட்டன. 1911 ஆம் ஆண்டில் ஒரே

கேதான் பூட்டுக்கள் - பனாமா கடற்கால்

நாளில் வேலை இன்னும் மும்முரமாக நடைபெற்றது.ஒவ்வொன்றும் 400 பாரம் (டன்) பாறைகளை ஏற்றிச் செல்வனவாக 333க்கு மேற்பட்ட விசை வண்டிப் பெட்டிகள் ஓய்வொழிவின்றி வேலை செய்து வந்தன.

திட்ட வேலையின்போதே அடிக்கடி இப்பகுதியில் நிலச் சறுக்கல்கள் ஏற்பட்டன. திட்ட வேலை முடிந்தபின்னும் கூட, கடைசித் தடவையாக 1916இல் ஒரு பெருஞ் சறுக்கவேற்பட்டது. இவற்றால் ஏற்பட்ட உயிரழிவு, பொருளழிவு பெரிது.அதனுடன் வெட்டிய காலில் கொட்டிய மண்ணை மீண்டும் பெரு முயற்சி யுடன் வெட்டி வட்டி எடுக்க வேண்டியதாயிற்று. சறுக்கலின் கொடுமையை அதனிடையே அகப்பட்ட இருப்பு வண்டிகளும், இருப்புப் பாதைத் தண்டவாளங்களும் காட்டின. முந்தியவை தவிடுபொடியாயின. தண்டவாளங்களோ தொய்வக (ரப்பர்)