உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 அப்பாத்துரையம் - 11


வீரமரபில் நின்ற பிள்ளையாகிய தென்னகத்தை நம்பி வெள்ளையர் அதனிடம் உரிமையை ஒப்படைக்க விரும்பவில்லை. தென்னகம் விடுதலை உரிமை பெற்றால் கீழ்திசை எங்கும்-ஆசியா, ஆபிரிகா முழுவதும் முன்போல் மீண்டும் புதிய தேசீயங்களாகத் தழைத்துப் புதுநாகரிகம் வளர்க்க நேர்ந்துவிடும் என்பதையும், கீழ்திசையெங்கும் வெள்ளை ஏகாதிபத்தியங்கள் நடத்திவரும் சுரண்டலுக்குக் குந்தகம் வந்துவிடும் என்பதையும் வெள்ளையர் அறிந்திருந்தனர். அதே காரணத்தினால்தான் வெள்ளை ஏகாதிபத்தியம், தெற்கே காங்கிரஸ் சார்பில் போர் முழக்கமிட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரத்தின் வாரிசுகளையோ, காங்கிரசுக்கு வெளியேயிருந்து மிதவாதப் போர்வையில் சமூகப் புரட்சியும் அடிப்படைத் தேசீயத் தன்மான ஆர்வமும் வளர்க்கத் துணிந்த நீதிக்கட்சியின் வாரிசுகளையோ முற்றிலும் தமக்கேற்ற அடிமைகளாக, கங்காணி மன்னர்களாக நம்பவில்லை. சுய ஆட்சி என்று கத்திப் பின் சுயஆட்சியின் சாரம் போதும் என்று விளக்கியும்; பூரண சுதந்தரம் என்று முழக்கிப் பின் பிரிட்டிஷ் மன்னரையே பொதுவரசின் இணைப்புச் சின்னமாகக் கொண்ட குடியரசு வேண்டுமென்று பசப்பியும் இருதிசை மணியங்களாய்த் தேசீய வேடமிட்ட வடதிசை ஏகாதிபத்திய முதலாளித்துவத் தலைவர்களையே நம்பி, அவர்களிடம் கவலையின்றித் தம் உரிமையை ஒப்படைத்தனர்.

குலைக்கிற நாய் கடிக்காது என்ற வெள்ளையரின் அனுபவஅறிவு வீண் போகவில்லை.

இன்று பல்லிழந்த பழைய வெள்ளை ஏகாதிபத்தியமாகிய பிரிட்டனுடனும், புதிதாக அரிசிப்பல் குருத்துவிட்டு வரும் புதிய வெள்ளை ஏகாதிபத்தியமாகிய அமெரிக்காவுடனும் இந்திய உள்நாட்டு ஏகாதிபத்தியம் தன் உரிமை முதலாளிப் பிள்ளைகளாகிய டாட்டா பிர்லாக்கள் மூலமாகவும், டி, டி, கே. நேரு போன்றவர்கள் மூலமாகவும் பேரம் செய்து தென்னகத் தேசீயத்தையும் அது சூழ்ந்து நிலவும் முதிரா ஆசியத் தேசியங்களையும் பிரித்தாண்டும் சுரண்டியும் கீழ்திசையில் அடிமைப் பயிர் வளர்த்து வருகிறது.

வெள்ளை ஏகாதிபத்தியங்கள் எல்லாமே வீழ்ந்துவிட நேர்ந்தால்கூட ஓர் அரை வெள்ளை ஏகாதிபத்தி யத்தையாவது