உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிட நாடு 167

எவருமே-அறியாத ஒன்று. உண்மையில் வடதிசைப் பரப்பு நில எல்லையில்கூட வீர மரபு பேணாது, நடு ஆசியாவின் பண்படாக்குடிகளின் குடியெழுச்சிகளுக்கும் படையெழுச்சிகளுக்கும் வாயில் திறந்து வைத்து, தான் கெட்டதுடன் நில்லாது தென்னகத்தின் வீரமரபிலும் கடல் மரபிலும் சமயப் போர்வையில் புகுந்து கேடு சூழ்ந்தது. அதன் பயனாகவே கடைசித் தென்னகப் பேரரசரான விசய நகரப் பேரரசரும் 16-17-ஆம் நூற்றாண்டுத் தென்னகமும் பழைய வீர மரபு கடல் மரபு இரண்டும் பெரிதளவு மறந்து வெள்ளையர் கடல்வழி வரவுக்கு இடந்தர நேர்ந்தது என்னலாம்.

தென்னகத்தேசியத்தில் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் இம்மரபு புதுப்பிக்க எண்ணியும் வடதிசைப் போலித் தேசியம் அவர் பண்பையும் மறைத்துப் பெயரையும் இருட்டடித்து வருவது தமிழர்களனைவரும் அறிந்ததேயாகும்.