உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16. உயிர் ஏகாதிபத்தியத்தின் எச்சமிச்சமான உயிரற்ற ஏகாதிபத்தியம்

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியிலே இந்தியா ஒரு தனித் தேசிய இனமாகவோ, ஒரு தேசிய உறுப்பாகவோ, ஒரு தேசியக் கூட்டுறவாகவோ கூட இடம் பெற்றிருக்கவில்லை. இதைப் போலித் தேசியப் போர்வை போர்த்த பாரத பக்தர்கள் மறந்திருக்கக்கூடும்; அல்லது மறந்துவிட்டதாகப் பாவிக்கக் கூடும். தெரியாதவர்களாக, நினையாதவர்களாகக்கூட நடித்து மறைக்கக் கூடும். ஏனெனில் மறதியும் மறைப்பும் வ் வகையில் அவர்களுக்கு ஆதாயமானவை.

சில காரியச் சமர்த்தரான வணிகர் உண்டு. அவர்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் வரும் சமயங்களில், தம் கண்கள் அரை குறைப் பார்வையுடையவை என்பது அவர்கள் நினைவுக்கு வந்துவிடும். தம் செவிகள் கிட்டத்தட்டச் செவிடு என்பதையும் அச் சமயம் அவர்கள் மறந்துவிட மாட்டார்கள். ஆனால், கடன் வாங்கியவர்கள் நெடுந்தொலைவில் சென்றால்கூட, அவர்கள் கண்கள் கழுகுக் கண்களாகவும், செவிகள் பாம்புச் செவி களாகவும் செயல்படத் தயங்கமாட்டா. டில்லி ஏகாதி பத்தியவாதிகள் இந்தக் கலையைக் கரை கண்டவர்கள். அவர்கள் வேண்டும்போது, ஆதாயம் குறிக்கொள்ளும்போது, குருடாக, செவிடாகமட்டுமல்ல - பார்வை என்ற ஒன்று, ஓசை என்ற ஒன்று இருப்பதையே அறியாதவர்களாக நடிக்க, நடக்கத் தொடங்கி விடுவர்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மிகப் பெரிய, ஆனால், துண்டு துண்டாக, உலகெங்கணும் சிதறிக் கிடந்த ஓர் உருவிலாப் பரப்பு. பெயரளவில் அதன் தலைமையிடமாக விளங்கிய பிரிட்டனோ, அதன் ஒரு மூலையில், உலகிலே ஒதுக்குப்புறமான ஒரு கோடியில் உள்ளது. எனவே அதன் ஒரு பெரும் பரப்பாக, நடுநாயகமைய