உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

189

இந்திய ஏகாதிபத்தியத்தின் முதல்வரே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் முதல்வராக, உலகத்துக்கும் முதல்வராக விளங்கினார். அவர் ஆட்சிப்பரப்பு ஏகாதிபத்தியத்திற்குள் ஒரு குட்டி ஏகாதிபத்தியமாக, உலகத்தில் ஒரு குட்டி உலகமாக இயங்கிற்று என்பதை இது தெளிவுபடக் காட்டுகிறது.

-

இந்திய ஏகாதிபத்தியம் என்று பிரிட்டிஷ் ஆட்சியில் அழைக்கப்பட்ட பரப்பு ன்றைய பாரதத்தை இந்தியக் கூட்டரசை மட்டும் உட்கொண்டதல்ல. ன்றைய கிழக்கு, மேற்குப் பாகிஸ்தான்கள் இரண்டையும் அது உள்ளடக்கியது. இவை மட்டுமல்ல. இன்றைய இலங்கையும், பர்மாவும், ஏடனும் சிங்கப்பூரும், மலாயாவும், மாலத் தீவுகளும், இலக்கத் தீவுகளும், அந்தமானும்,நிக்கோபாரும் அதனுடன் இணைந்த பகுதிகளாகவே இருந்தன. பிரிட்டிஷார் வென்று கைக்கொண்ட பகுதிகள் என்ற முறையில் தென்னகத்துடன் இந்திய, பாகிஸ்தான் பரப்புக்கள் ஒன்றாகக் கட்டிப்போடப்பட்டது. போலவே, ஏடன், இலங்கை, மலாயா, சிங்கப்பூர், பர்மா ஆகியவையும் இந்திய ஏகாதிபத்தியத்துடன் சேர்த்து இணைக்கப்பட்டிருந்தன. அத்துடன் இவற்றைப் போலவே, வடமேற்கில் ஆப்கானிஸ்தானத்தையும் பலூச்சிஸ்தானத்தையும், வடக்கே நேபாள, பூட்டாணப் பகுதிகளையும், வட கிழக்கில் இந்துசீனம், சீனம், திபெத் ஆகியவற்றையும் கூடப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வென்று இந்திய ஏகாதிபத்திய ஆட்சியுடன் சேர்க்கவே விரும்பிற்று. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விட்டுச் சென்ற ஏகாதிபத்திய மரபை இன்னும் மேம்பட வளர்க்கும் டில்லிக் குட்டி

திபத்தியம் இன்று சுதந்தர நேபாளத்திலும் இந்தியைக் கட்டாய மொழியாகப் புகுத்தப் போராட்டம் தொடங்கி வருகிறது! ஆனால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நேபாள பூட்டானை வெல்ல முடியாவிட்டாலும் இப்போது மேற்கு பாகிஸ்தானின் பகுதியாக விளங்கும் பட்டாணிஸ்தான் என்னும் பழைய ஆப்கானிஸ்தானப் பகுதியையும், பலூச்சிஸ்தானத்தையு மட்டுமே தங்கள் கைவசப்படுத்தி அன்றை ஏகாதிபத்தியப் பகுதியுடன் சேர்த்தது. இச் செய்திகளை மனத்துட் கொண்டே பாரத பக்தர்கள் 1947-இல் பிரிந்துவிட்ட பாகிஸ்தானிலிருந்து பட்டாணிஸ்தானைப் பின்னும் பிரித்துப் பிரிந்த பாகிஸ்தானின் எதிரியாகத் தம் பக்கம் சேர்க்க அரும்பாடுப் பட்டுள்ளனர்