உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

195

ஆரவாரம் செய்து, தெரிந்தோ தெரியாமலோ தன்னுடன் சேர்ந்து கத்திய முஸ்லிம் விபீஷணர்களையும் பலியிட்டு, பாகிஸ்தான் தேசியத்தின் முன் பணிந்தது. அதனுடன் போட்டியிட்டு நாடு பிரித்துச் செயற்கைத் தேசியம் ஆக்கிற்று! உலக இயக்கமன்றித் தேசிய இயக்கப் பண்பு உணராத காங்கிரஸில் வளர்ந்த உலகப் பெரியாரான காந்தியடிகளைக் கூடக் கைவிட்டு, அவரையும் பலிகொண்டு, காங்கிரஸ் ஏகாதிபத்தியம் பிரிவினைக்குப் பணிந்ததுடன் நில்லாது, அதையே தன் புதுத் தேசிய கீதமாகவும் ஆக்கிக்கொண்டது. அதன் பலனே புதிய ஏகாதிபத்திய ‘சுயராஜ்யம்’!

பிரிவினை அடிப்படையாகச் சுதந்தரம் பெற்ற தேசியம்தான் அது - இப்போது பிரிவினையா என்று சீறுகிறது!

இதில் இன்னொரு அழகு என்னவென்றால், இன்று திராவிட நாடு ஒரு தேசியமா என்று டில்லி ஏகாதிபத்தியக் குட்டிக்குப் பின் பிறந்த ஏகாதிபத்தியக் கடைக்குட்டியாகிய கம்யூனிஸ்ட்கள் டில்லி ஏகாதிபத்தியக் கட்சியின் வேட்டை நாயாய்ப் பாகிஸ்தான்வாதிகள் மீது பாய்ந்தது என்பதே! ஆனால், புதிய பாகிஸ்தானில் பாகிஸ்தான் காங்கிரஸ் கட்சிபோல, பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி பிரித்து, அப்புதுத் தேசிய எதிர்ப்பை விழுங்க அது தயங்கவில்லை! நாளை திராவிட நாடு அமைந்த பின்னும் அது திராவிட நாட்டு எதிர்ப்பை விழுங்கித் திராவிட நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியாக இயங்கத் தயங்காது என்று உறுதியாக நம்பலாம்!

-

பாரத பக்தர்கள்

-

பல

திராவிட நாடு வகையில் மற்ற தேசியங்களை எதிர்த்துக் கூச்சலிட்டது போலக் கூச்சலிடக்கூடத் துணிய வில்லை. அதன் உள்ளார்ந்த உயிர்த் தேசிய வலுவை அவர்கள் அக உள்ளம் உணர்ந்துள்ளது. திராவிட இயக்கத்தார் மட்டுமே உரத்துக் குரல் எழுப்புகின்றனர், நாவிலே! காங்கிரஸ் தலைவர்கள், அறிஞர்கள் அதையே உள்ளத்திற்குள் வைத்துக் குமுறுகின்றனர் என்பது அவர்கள் அறியாததல்ல. திராவிட இயக்கம் பொது மக்களிடையே வேகமாகப் பரவுவதும் அவர்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களின் ஒரே நம்பிக்கை - மக்கள் உரிமைகளை விபீஷணர்கள் ஆட்சி மூலமாகவும், தேர்தல் சூழ்ச்சிகள், சமரசப் பிரசாரங்கள் மூலமாகவும் மிதித்துத்