உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(212)

அப்பாத்துரையம் 11

மக்களுடன் மக்களாகவோ வேறுபாடில்லாமலே வாழ்வதும் காண்கிறோம். இன்றளவும் வரலாற்றில் இவ் வேறுபாடுகளின் தடங்களைப் பார்க்கலாம்.

இனங்கடந்த இயல்பான திராவிடப் பண்பின் ஆற்றலை யும், ஆரியப் பண்பாட்டின் அழிமதியையும் காந்தியடிகள் வாழ்க்கையிலே ஒருங்கே காணலாம்.

பாரத தேசியத்தை ஏற்ற காந்தியடிகள் திராவிட இனத் தேசியத்தை முற்றிலும் மறுக்கவே முற்பட்டிருந்தார் என்பதை மேலே கண்டிருக்கிறோம்.ஆனால், அதே சமயம் திராவிடரின் இன வேறுபாடற்ற பண்பு அவர் வாழ்க்கையில் ஒளி வீசிற்று என்பதில் ஐயமில்லை.அவரே இப்பண்பு காரணமாகப் பகவத்கீதை, இயேசு பிரானின் மலைமேல் போதனை, நபி நாயகம், டால்ஸ்டாய் போன்றவர் அருள் நெறிகள், வள்ளுவர் குறள் ஆகியவற்றை ஒரேபடியில் வைத்து மூல ஒளிகளாகக் கண்டுள்ளார். ஆனால், இயேசுபிரான், நபிநாயகம், டால்ஸ்டாய், வள்ளுவர் ஆகியோர் பண்புகள் அவரை ‘உலகப் பெரியார்', 'மகாத்மா' ஆக்கின என்பதில் ஐயமில்லை. அவற்றுடன் ஒப்பாக அவர் கொண்ட கீதையோ அவர் வாழ்க்கைக்குக் கூற்றுவனாக முடிந்தது!

திராவிடத் தேசியத்தை மறுத்த அடிகளின் இறுதித் தொழுகைக் கூட்டத்தை அடுத்தே மற்றொரு தொழுகைக் கூட்ட நிகழ்ச்சியும், அதன் ஒரு மூல நிழல் என்று கொள்ளத்தக்க அவர் தேசிய வாழ்வின் தொடக்க நிகழ்ச்சி ஒன்றும் இதனை முனைப்பாக நம் கண்முன் படம் பிடித்துக் காட்ட உதவுகின்றன.

‘தென்னகத்தில், தமிழகத்தில், பிராமண எதிர்ப்பியக்கம் ஒன்று வகுப்புவாத முறையில் உயிராற்றலுடன் இயங்குகிறது. அது தமிழகக் காங்கிரசைக்கூட ஆட்டிப் படைக்கிறது. இதுபற்றித் தங்கள் கருத்து விளக்கம் அறிய விரும்புகிறோம்' என்று தொழுகைக் கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

6

அதற்குக் காரணம் என்ன? எத்தனையோ சாதிகள் தமிழகத்தில் இருக்க, பிராமணரை மட்டும் இப்படி ஒரு சாரார் எதிர்ப்பானேன்?' என்று கேட்டார் அடிகள்.

"கல்வித் துறையிலும், எல்லா நிலையங்களிலும், பணிமனைகளிலும் பிராமணரே பெருவாரியாக இருக்கின்றனர்; இதனால் ஏற்படுவதே இந்த எதிர்ப்பு” என்று விடை தரப்பட்டது.