உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(214

அப்பாத்துரையம் 11

அது இருபதாம் நூற்றாண்டில் இருபது கடந்த காலம். தென்னகத்தில் இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூல முன்னோடியான நீதிக்கட்சி ஆட்சி மேற்கொண்டிருந்தது அந்நாட் களில்! ஆனால், ஆட்சி நீதிக்

கட்சியின் கையிலிருந்தாலும், இன்றும் ஆளும் வகுப்பினர் உள்ளத்திலே திராவிட முன்னேற்றக் கழகப் பண்பு உள்ளூறப் பரவி வருவதுபோல, அன்று அரசியல் வடிவிலில்லாவிட்டாலும் ஆன்மிக வடிவில், அறவடிவில் காந்தியாரின் அருட் பண்புகள் மக்களிடையேயும் நீதிக் கட்சி ஆட்சியாளரிடையேயும் கூடப் பரவி வந்தன. பல நீதிக் கட்சித் தலைவர்கள் காங்கிரசின் அரசியல் கோட்பாட்டை ஏற்காமலே காந்தியடிகளின் அருளுருவின் வீர வழிபாட்டில் தம்மையறியாது இழைந்து வந்தனர். அவர்களில் சிலர் திரை மறைவில், ஆனால், தூய உள்ளத்துடன், தலைமை யாட்சியாளரிடையிலேயே மெல்லக் காந்தியப் பிரசாரமும் காங்கிரசுப் பிரசாரமும் தொடங்கினர்.

காந்தியடிகள் வந்தபின் காங்கிரஸ் இயக்கம் பழைய அரசியல் இயக்கமாக இல்லை. மனங் கவர்ந்து ஆட்கொள்ளும் மக்கள் இயக்கமாகி வருகிறது. அதற்கு வெளியே இருந்து நாம் எதிர்நீச்சு நீந்துவானேன்? காங்கிரசிலேயே சேர்ந்து பிராமணரல்லாதார் நலனுக்காகக் காந்தியடிகளின் தூய அருள் தலைமையில் போராடுவோம்!' என்று அவர்கள் பேசினர்.

நீதிக் கட்சியின் முதல்வர்களில் ஒருவர் நீங்கலாக மற்றவர்கள் காங்கிரசில் இருந்து வளர்ந்தவர்களே. அதைத் தோற்றுவித்த அந்த முதல்வர் டாக்டர் நடேசனோ காந்தியடி களுடனொத்த அருளாளர், மக்கள் தொண்டர். ‘மகாத்மா’ப் பட்டம் பெறாத ஒரு மகாத்மா. நீதிக்கட்சியின் இதயம் அவரே. இதயமும் மூளைகளும் பேசி ஒரு முடிவுக்கு வந்தன. நீதிக்கட்சியினர் படிப்படியாகக் காங்கிரசில் சேருவதென்றும், ஆனால், சேரு முன்னால் தம் மனங் கவர்ந்த அருள் தலைவர் காந்தியடிகளுடன் தம் கருத்துக்களைக் கலந்து கொள்வதென்றும் தீர்மானமாயிற்று.

பிராமணர் அல்லாதார் நலனில் தம் அக்கறை காட்டு வதற்காக, காங்கிரசிலுள்ள பிராமண நல்லோர் எல்லாரும் சேர்ந்து, ஐந்தாண்டுகள் அரசியற் பணிகளில் புதிதாகப்