உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22. இனவேறுபாடும் இனமாற்றமும்

வள்ளுவர் நெறியில் வந்தது திராவிட இயக்கம். அதன் மூலமுதல் ஒளி வள்ளுவர். இதே வள்ளுவர் நெறியின் னங்கடந்த நிழலொளியாக விளங்கிய காந்தியடிகளுடன் ஒன்றுபட இருந்த அந்நாளைய பொன்னான வாய்ப்பைத் தமிழகப் பிராமணத் தலைவர் அன்று அழித்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிஞர் அண்ணா அதே ஒளியை பொன்னான வாய்ப்பைத் தமிழகப் பிராமணத் தலைவர் அன்று அழித்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிஞர் அண்ணா அதே ஒளியை முன்னிலும் விளக்கமுடன் திராவிட நாட்டின் பிராமண சமுதாயத்திற்கே அளிக்க முன்வந்துள்ளார். திராவிட நாட்டுப் பிராமண சமுதாயத்துக்கே மூளைகளென்று கூறத்தக்க தலைவர்கள் மொழித் துறையில் காட்டிய மனமாற்றத்தை இனத்துறையிலும் இனச்சார்பற்ற தேசியத் முறையிலும் காட்ட முற்பட்டால்,திராவிட இயக்கத்தை இன வேறுபாட்டியக்கம் என்று கூறி அதை தம் முகம் பார்க்கும் கண்ணாடியாக்குபவர் அறியாச் செயல் முற்றிலும் பட்டழிந்து, ஓருலகில் ஓருலகம் கண்ட தமிழினம் இடம்பெறவும், ஓருலகம் விரைவில் அமையவும் வழி எளிதில் ஏற்பட முடியும்.

உலக

தமிழகப் பிராமணர் மட்டுமன்றி, தமிழக இயக்கங்கள் பாரத இயக்கங்களில் தலைமை வகிப்பவர்களும் இனவேற்றுமையகற்றவல்ல திராவிட இன இயக்கத்தை எதிர்த்துப் போலித் தேசியம் வளர்ப்பதற்கு மாறாக, இன வேறுபாடற்ற திராவிட இனத் தேசியத்தை வளர்க்க முற்படுவார்களாக! அது பிராமணருக்கே ஒரு புதுப் புகழும் புது வாழ்வும், பாரத தேசியத்துக்கே ஒரு நல்ல வழிகாட்டியும் ஆகும். திராவிட தேசியத்துக்கு வழிவகுத்து அதன்பின் தானும் அவ்வழி நின்றாலன்றி, பாரத தேசியம் ஓருலகு காணவல்ல நல்ல