உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

221

இலக்கியமுடைய மொழிகள் இரண்டே இரண்டுதான் இருந்தன. ஒன்று திராவிடத்தில் தமிழ்; மற்றது ஆரிய நாடு என்று அன்று அழைக்கப்பட்ட தேசிய உருவிலாப் பரப்பில் திராவிடப் பண் பாட்டின் தாக்குதலால் புதிதாக எழுந்த செயற்கை இலக்கிய மொழியாகிய சமஸ்கிருதம். முன்னது தென்மொழி என்றும் பின்னது வடமொழி என்றும் அந்நாளில் அழைக்கப்பட்டதன் காரணம் இதுவே. தெற்கு அந்நாளிலேயே ஓர் உயிர்மொழி, தேசிய மொழியை மணமுள்ள மலராகப் பேணிற்று. வடக்கோ உருவிலா, உயிரிலா மொழி, தேசியப் பண்பற்ற மொழியைத்தான் மலராகப் போற்றிற்று!

12ஆம் நூற்றாண்டுடன் தென்மொழி, வடமொழி என்ற இந்த வழக்குப் பொருளற்ற பழவழக்கமாக மாறிவிட்டது. சமஸ்கிருதத்தின் இலக்கிய வாழ்வு அந்நூற்றாண்டுடன் கிட்டத்தட்டமாண்டது. அதே சமயம் 12-ஆம் நூற்றாண்டு முதல் தென்னாட்டு மொழிகள் நான்கும் இலக்கிய வாழ்வில் புதுமலர்ச்சியுற்றன. விந்தியத்துக்கு அப்பாலும் சிறப்பாக வட இந்தியாவின் தெற்கு, கிழக்கு எல்லையிலுள்ள தாய்மொழிகளில் 16ஆம் நூற்றாண்டில் சிலவும், 18, 19ஆம் நூற்றாண்டுகளில் சிலவும், 20ஆம் நூற்றாண்டில் சிலவுமாகப் புதிதாக இலக்கிய வாழ்வும் மொழி வாழ்வும் மலர்ச்சியும் பெற்றன. இம் மலர்ச்சிகளுக்குத் திராவிடப் பண்பாட்டின் உயர்குறிக்கோளில் ஊன்றித் தமிழகத்திலிருந்து எழுந்து வடதிசை நோக்கிப் பரவிய வைணவ இயக்கமே காரணம் என்பதை வரலாறு காட்டுகிறது.

தமிழ் நீங்கலாக இந்தியாவின் எல்லா மொழிகளிலுமே இலக்கியங்கள் ஓரளவு இராமாயண பாரதங்களாக, பாகவதங் களாகக் காட்சியளிப்பதன் விளக்கமும் இதுவே.

னை

இந்த வைணவத்தை இன்னும் வடஆரியர் திராவிட சம்பிரதாயம் என்றும் தென்கலை என்றுமே அழைக்கின்றனர் என்பதும், தென்னாடில் 16 ஆம் நூற்றாண்டில் எழுந்த வடகலை, வடநாட்டில் இன்றுவரை பரவவில்லை என்பதும் இங்கே குறிப் பிடத்தக்கன.

'ஆரியமாவது திராவிடமாவது' என்ற கூக்குரல் உண்மையி லேயே எழுமானால், இனவேறுபாடு, இன உயர்வு தாழ்வற்ற அத்தகைய நிலை உண்மையில் ஏற்பட்டிருக்குமானால்,