உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

(223

நெறி, சங்க இலக்கிய நெறி. அதனைக் குருதியிலே, இனத்தலை யூற்றிலே கொண்ட திராவிட இனம் உலக இனங்களில் தலை சிறந்து விளங்க மட்டுமல்ல, உலக இனங்களுக்கு வழிகாட்ட மட்டுமல்ல, உலக இனங்களையே கைதூக்கிவிட்டு உயர்த்தவல்ல இயல்பான வாய்ப்பு வளம் உடையது. ஆனால், வள்ளுவர் பண்பை, சங்க இலக்கியப் பண்பை, வளர்க்கும் வாய்ப்பு, அதனடிப்படையில் நாடும் அரசியலும் சட்டமும் அரசிய லமைப்பும் வகுக்கும் உரிமை திராவிடருக்கு இன்று இல்லை. திராவிட நாடு அமையும் நாளிலேயே அது ஏற்பட முடியும். தமிழகத்திலும் தமிழிலக்கியத்திலும் தமிழர் சமய வாழ்விலும் கலந்த ஆரியப் பண்பாடு அதை வளமாக இயங்கவொட்டாமல் நீண்டகாலம் தடுத்து வந்துள்ளது. அது போதாமல் பிரிட்டிஷ் ஆட்சியிலும் இன்றும் அதுவே - அந்த ஆரியப் பண்பே - முழுதும் ஆட்சியுரிமையும் சட்ட உரிமையும் பெற்று நிற்க, தமிழும் தமிழின மொழிகளும் அவற்றின் பண்பாடுகளும் உரிமையற்ற நிலையில் வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் போராட வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றன.