உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

245

இலங்கைத் தமிழ் விழாவில் நம் பெயரில்லாத் தமிழ் நாட்டின் தமிழமைச்சரும் தேய்ந்த தமிழகத் தமிழறிஞரும் சென்றிருந்தனர். கண்காட்சிகளைப் பார்வையிடச் சென்றனர். புத்தகக் கண்காட்சி, படக் கண்காட்சி ஆகியவற்றைக் கடந்து, கலைக் கண்காட்சிப் பக்கம் திரும்பினர்.

'திராவிடக் கலையரங்கம்'

என்ற பெயரைக் கண்டு திகைத்தனர். இது எந்தக் கறுப்புச் சட்டைக்காரன் செய்த செயல் என்று தமிழுக்கே வளர்ச்சிக் கழகம் அமைத்துள்ள அந்நாளைய அமைச்சர் சீறினாராம்! தமிழ் விழாவில் ஏன் ‘திராவிடம்' என்று கடிந்து உசாவினாராம்! பதில் அவரை வெள்குற வைத்தது. தமிழ்க் கலைகளில் மிகப்பெரும் பாலானவை ‘தமிழகத்துக்கு வெளியிலேதானே இருக்கின்றன?' என்று கேட்டார்களாம் அவர்கள்!

சிலப்பதிகாரத்தைத் தமிழ் காப்பியமாக மட்டும் போற்றும் தமிழருக்கு இது ஓர் ‘அபாய அறிவிப்பு' - திராவிடம் என்ற சொல்லை வெறுக்கும் தமிழர், சிலப்பதிகாரத்தை மட்டுமல்ல, பதிற்றுப்பத்தையும் தமிழகத்தைவிட்டு விரட்ட வேண்டும். நாயன் மாரில் ஒரு நாயனாரைத் தலைமுழுகியாக வேண்டும் ஆழ்வார்களில் ஒரு ஆழ்வாரையும் ஆழ்வார்கள் பாடிய திருநாலாயிரத்தில் ஒரு ஆயிரத்தையும் வெட்டியெறிய வேண்டும்.

வை மட்டுமோ? சங்க இலக்கியத்திலேயே புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றை, அகநானூற்றுப் பாடல்கள் பலவற்றை, மற்ற சங்கப் பாடல்களில் பலவற்றை - டி.கே.சிதம்பரநாதன் போற்றிய முத்தொள்ளா யிரத்தில் கிடைத்துள்ள நூறு வெண்பாக்களிலும் சிலவற்றைத் தள்ள வேண்டும்!

-