இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
ரு
111
பிரமசமாஜம் தீவிர சமய சமூகச் சீர்திருத்த இயக்கம். அது மேனாட்டின் பகுத்தறிவியக்கத்தையும், மேனாட்டு நாகரிக ஒளியையும் இரு கையேந்தி வரவேற்றது. இதன் பயனாக அதனை மேனாட்டு நாகரிகம் சார்ந்த இயக்கம் எனப் போலிப் பழைமையில் தோய்ந்த மக்கள் நினைக்க நேர்ந்தது. அதற்கேற்ப, அதில் படித்த மக்களே பேரளவில் சேர்ந்தார்கள். அது 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ச்சி குன்றிவிட்டது. இருபதாம் நூற்றாண்டில் அஃது ஆந்திர நாடு, தமிழ் நாடு, கன்னட நாடு ஆகிய தென்னாட்டுப் பகுதிகளிலும் பரவிற்றாயினும் இங்கும் விரைவில் தளர்ச்சியடையவே நேர்ந்தது.
பிரம சமாஜ இயக்கம் மேனாட்டு நாகரிகத்தின் நிழல் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதில் ஐயமில்லை. கீழ் நாட்டில் பல போலிப் பழைமைகளை அது எதிர்த்தது போலவே, மேல் நாட்டிலும் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்தின் உருவ வணக்கம், புரோகிதர் ஆட்சி ஆகியவற்றையும், கிறிஸ்தவரின் மும்மைத் தெய்வ வடிவக் கற்பனையையும், இஸ்லாமியரின் முகமூடி வழக்கத்தையும் அது கண்டிக்கத் தயங்கவில்லை. அதனை மேனாட்டுப் பகுத்தறிவொளியின் நிழல் என்பதைவிட, உபநிடத இயக்கத்தின் புதுமலர்ச்சி என்று கூறுவதே சால்புடையது ஆகும். சமயத் துறையில் அது வேதங்களையும், புராண சுமிருதிகளையும் மேற்கோளாக ஏற்காமல், உபநிடதங்களையே ஏற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரமசமாஜ இயக்கம் போதிய அளவு பொது மக்களிடையே பரவவில்லையானாலும், மாநில வாழ்வில் அது மறைமுகமாக ஆற்றிய விளைவுகள் மிகப் பல. அவை புரட்சி கரமானவை. சமய சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் அனைத்திற்கும் அது முன்னோடி மரபாகவும் தூண்டுதலாகவும் அமைந்தது. சமாஜத்தின் முப்பெருந்தலைவர்களுள் இராமமோகனருக்குப் பின் வந்தவர் கேசப்சந்திர சேனர். அவர் இந்தியாவின் முதல் சமூகச் சீர்திருத்தச் சட்டமான பதிவுத் திருமணச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்ற அரும்பாடுபட்டார்; அதில் வெற்றியும் கண்டார். மூன்றாம் பெருந்தலைவர் மகரிஷி தேவேந்திரநாத தாகூர் ஆவார். ‘மகரிஷி' என்ற அப்பெயரே அவர் சிறந்த பத்திமான் என்பதைக் காட்டும். அத்துடன் அவர் வங்கத்தின் தலைசிறந்த மறுமலர்ச்சிக் கவிஞருள் ஒருவர். கல்வித்