இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
113
பேரவையின் வாழ்வுக்கு ஆரிய சமாஜம் தந்த பரிசுகள் இரண்டு; ஒன்று, ஆரிய சமாஜத்தின் தலைவர்களுள் ஒருவரான லாலா லஜபதி ராயின் தலைமை. அவர் பேரவை இயக்கத்திலும் முதல்தரத் தலைவர்களுள் ஒருவராய் விளங்கினார். மற்றொரு பரிசு; இந்தி இயக்கம். வடநாடெங்கும் ஆட்சியாளரால் உருது எழுத்தும், உருது இலக்கியமுமே பிரிட்டிஷ் ஆட்சியில் நாட்டு மக்களின் பெரும்பான்மைத் தாய்மொழியாகவும் நாட்டு மொழியாகவும் கருதப்பட்டு வந்திருந்தன. அரசியல் துறையில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியான இடம் அதற்கு அளிக்கப் பட்டிருந்தது. சமயத் துறையிலோ, வடமொழியே முழு இடம் வகித்திருந்தது. இந்திப் பற்றாளர் ஒருவர், வடமொழி எழுத்து முறையாகிய நாகரி எழுத்து முறையையும், இந்தியையும் பரப்ப ‘நாகரி பிரசாரிணி சபை' ஒன்று அமைத்திருந்தார். ஆரிய சமாஜம் சமயத்துறையில் இந்தி மொழியை மக்கள் தாய் மொழியாகப் பேரளவில் வழங்கி, இந்தியை வளர்த்தது.பேரவை இந்தியை மாநிலப் பொது மொழியாக ஏற்பதற்கு ஆரிய சமாஜமே பெரிதும் காரணமாயிருந்தது என்பதில் ஐயமில்லை.
ய
இராமகிருஷ்ண மடமும், விவேகானந்த அடிகளும்
இராமகிருஷ்ண மடம் இராமகிருஷ்ண பரமஹம்ஸர்
என்ற பெரியார் பெயரால் அவர் தலைமாணவரான விவேகானந்த அடிகளால் நிறுவப்பட்டது. இந்திய மாநிலச் சமய வாழ்விலும் கருத்திலும் இராமகிருஷ்ணரின் வாழ்வும் செயலும் தந்த தூண்டுதல் பெரிது. ஆனால், அவர் மாணவர் செய்த சேவை, அதை இந்திய அரங்கிலிருந்து உலக அரங்கக்கு ஏற்றிப் புகழ் தந்தது. காந்தியடிகள், தாகூர் ஆகிய இருவருக்கும் முற்பட்டு இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த சிறப்பும், இந்திய மக்களின் தன்னம்பிக்கையையும் தன்மதிப்பையும் தட்டி எழுப்பிய சிறப்பும் விவேகானந்த அடிகளுக்கே உரியவை. அவர் பெருந்தொண்டு சமயத்தின் அறிவுத் துறையிலேயேயானாலும், சமூகத் தொண்டிலும் அவர் மிகவும் ஆர்வம் காட்டியிருந்தார். தென்னாட்டு ஆசாரியர்களாகிய சங்கரர், இராமானுசர், மாத்துவர் என்பவர்களின் அடிச்சுவடுகளையும், வங்க சமயாசாரியரான சைதன்னியர் அடிச்சுவட்டையும் பின்பற்றி,