உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




262

அப்பாத்துரையம் - 12

உரிமையையும் அது இந்தியாவிடமே விட்டுவிட்டது. இந்தியா விரும்பினால், பொது அரசை விட்டு 1947-லேயே அது விலகியிருக்கலாம்; இன்னும் விலகத் தடை ஏதும் இல்லை.

ஆயினும், பொது அரசின் உறுப்பான குடியேற்ற நாட்டுரிமை நிலையிலேயே இந்தப் பிரிவினை உரிமை உண்டு. அத்துடன் வெளிநாட்டுத் தொடர்புகளிலும் உலக அரசியலிலும் புதிய குடியரசான இந்தியா தனித்து இயங்குவதால் பெறும் வலுவைவிடப் பொது அரசு உறுப்பாகப் பெறும் வலு, பெரிதாயிருக்கும். இவ்விரண்டையும் கருத்திற் கொண்டே இந்தியாவின் முதல்வர் பண்டித ஜவஹர்லால் நேரு, பொது அரசில் இந்தியா உறுப்பாயிருக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால், பழைய பேரரசு பொது அரசாக மாறிவிட்ட பின்னும் இன்னும் ஓர் அரசர் தலைமையிலேயே இருந்து வருகிறது. இந்தியா ஒரு குடியரசாதலால் ஓர் அரசர் தலைமையை ஏற்க முடியாது. இந்த இக்கட்டை அகற்றப் பண்டித நேரு புதிய அரசியல் வழியைப் பின்பற்றினார்.

இந்திய குடியரசாதலால், அரசைப் பொதுவாக ணைப்பின் சின்னமாக மட்டுமே கொள்ளப் பொது அரசு இணங்குவதானால், அதில் இணைந்து இருக்க இந்தியா விரும்பும் என்று பண்டித நேரு அறிவித்தார். அவர் காட்டிய வழியை 1949 ஏப்ரலில் இலண்டனில் கூடிய பொது அரசு மாநாடு ஏற்றுக் கொண்டது. எனவே, இந்தியா முன்போலவே பொது அரசின் உறுப்பாய்க் குடியேற்ற நாட்டு நிலையுடன் அமைந்து வாழ்கிறது.

உலக அரசியலில் பொதுவாகவும், ஆசிய அரசியலில் சிறப்பாகவும், இந்தியா மிகுதியான பங்கு எடுத்துக் கொண்டு வருகிறது. 1947லேயே அது ஆசிய மாநாடு கூட்டி, இந்தோனேஷியாவின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தந்துள்ளது. புதிய பர்மிய அரசியலுக்கும் அந்நாட்டில் உள்ள பல அரசியல் கொந்தளிப்புகளிடையே இந்தியா ஆதரவளித்தது.

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை நடுவு நிலைமையும் நேர்மையும் கலந்ததாய் இருந்து வருகின்றது. உலக அரசியலில் கொரியாப் போராட்டத்தின் முதல் முதல் தாக்குதலில் இறங்கிய கட்சியை அது வன்மையாகக் கண்டிக்கத் தயங்கவில்லை. ஆனால், அதே சமயம் இங்ஙனம் கண்டித்தவர்களை ஒருமுகப்படுத்தி