18
அப்பாத்துரையம் - 12
உண்டாக வேண்டும். அடிமையாட்சிக் காலங்களிலே மக்களுக்கு அரசியலார்வம் குன்றிவிட்டது. 'இராமன் ஆண்டாலென்ன? ராவணன் ஆண்டாலென்ன? கூட வந்த குரங்காண்டா லென்ன?' என்று கூறும் அரசியல் அக்கறையற்ற நிலையில் ன்று மக்கள் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், அவர்களுக்கு வாழ்க்கையில் ஆர்வம் குன்றிவிட்டதேயாகும்.
மக்கள் வாழ்க்கை இன்று கரை காணாத் துன்பக்கடலாய்- மாளாப் போராட்டமாய்விட்டது. வறுமை, அறியாமை, பிE ஆகியவை அவர்கள் வாழ்க்கைத் திரையில் கோர தாண்டவம் ஆடுகின்றன. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு வறுமை இம்மாநிலத்தில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு வேளைகூட வயிறார உண்ண உணவில்லாதவர் தொகை
ங்கே பெரிது. மானத்தைக் காக்கும் முறையில் அரையில் சுற்றிக் கொள்ள ஒரு நல்லாடையற்றவர், வெயிலுக்கும் மழைக்கும் குளிருக்கும் ஒதுங்கிக் குந்தியிருக்க ஒரு குடிசையில்லா நிலையிலுள்ளவர் எண்ணற்றவர். தலைமுறை தலைமுறையாய் இரந்துண்பதையே தொழிலாகக் கொண்டவரும், மீளாத நோயில் கிடந்து மாளாத நரக வாழ்க்கையைச் சுமந்து திரிபவரும் பலர். இவர்கள் வாழ்க்கைக்கே வகையற்று அலைபவர்கள்; துன்பம் என்றேனும் நீங்க வழி உண்டு என்ற நம்பிக்கையை இழந்துவிட்டவர்கள். இத்தகையவர்கள், 'பசி வந்திடப் பத்தும் பறந்து போம்' என்ற மூதுரைக்கு இலக்கானவர்களாய்த் தங்கள் துன்பத்திடையே தங்கள் மனைவிமார்கள், உற்றார், பெற்றோர்களைக்கூடச் சிந்திக்க முடியாமலிருக்கும்போது, அரசியலில் எப்படி ஆர்வம் கொள்ள முடியும்?
வாழ்க்கைத் தரமும் வாய்ப்பு நலங்களும்
வறுமை, முயற்சிக்குத் தூண்டுதல் ஆகலாம். ஆனால், வறுமையே அம்முயற்சிகள் பயனுறுவதைத் தடுக்கவும் செய்கிறது. முயற்சியை ஊக்கும் வறுமை, நீடித்த அல்லது நிலையான வறுமையன்று. வாழ்விடையே வரும் இடைக்கால வறுமை, இடையிடையே சற்று நம்பிக்கையூட்டி, முயற்சியை ஊக்கும் வறுமையாகவே இருக்க முடியும். ஆனால் இத்தகைய சிறு வறுமையிலுங்கூட உள்ளத்தில் அவா ஆர்வங்கள் எழமாட்டா. சற்று வளமான வாழ்க்கை, வளர்ச்சியடைய உதவும்