110
அப்பாத்துரையம் – 13
அல்லாதனுக்குப் பின் இராசமகேந்திர வரமாண்ட அவன் புதல்வர் அல்லயவேமன், வீரபத்திரன் ஆகியவர்கள் தாமே ஒரிசா மீது படையெடுத்தார்கள். எனினும் 1435-இல் ஒரிசாவின் தவிசேறியிருந்த கபிலேசுவரன் ஒரிசாவின் கசபதி மரபுக்கே இளவள ஞாயிறு போன்றவன். அவன் தாக்கியவர்களைத் துரத்தியடித்ததுடன் நில்லாது, தாக்கியவர்களை அவர்கள் தாயகத்திற்குள்ளேயே சென்றும் தாக்குதல் தொடர்ந்தான். அல்லயத் துணைவர்கள் கோரிக்கை மீது தேவராயன் படையுடன் சென்று கபிலேசுவரனை வெளியேற்றி உதவினான். ஆனால் பேரரசின் தொலையுதவி இராசமகேந்திரவரத்துக்கு நிலையுதவியா யமையவில்லை. வளர்ந்து வந்த கசபதி அரசு இராசமகேந்திரவரத்தை எளிதில் விழுங்கி ஏப்பமிட்டது.
வேழநாடும் ஈழநாடும் வென்ற விறல் வேந்தன்
விசயநகரப் பேரரசர்களுக்குள் மூன்றாம் மரபுக்குரிய கிருட்டிண தேவராயனுக்கு அடுத்தபடியாகப் புகழ்மிக்க பேரரசன் இரண்டாம் தேவராயனே. அவன் காலத்துக்குள் பேரரசின் எல்லையும், ஆற்றலும் மூன்று கடலளாவிப் பரந்திருந்தன.ஆனால் புகழுக்குக் காரணம் இது மட்டுமல்ல. மற்ற அரச பேரரசர்கள் ஆட்சிகளில் அரிதாக ஒரு பண்பு விசயநகரப் பேரரசின் ஆட்சியில் இதற்குள் நீடித்து வளர்ந்து வளந்தந் திருந்தது. பேரரசர் ஆட்சிப் பரப்பிலும், ஆட்சி வலுவிலும் மட்டும் கருத்துச் செலுத்தவில்லை. குடிகள் நல்வாழ்விலும் வளத்திலும், குடிகளின் நல்லெண்ணத்திலும் பேரரசர் முழுக்கவனம் செலுத்தி வந்தனர். தேசீய இயக்கத்தோடிணைந்த, அதில் மலர்ந்த பேரரசு அது என்பதே இதற்குரிய வரலாற்று விளக்கம் ஆகும்.
இரண்டாம் தேவராயன் காலத்திய புகழுக்கு மூன்றாவது ஒரு காரணமும் உண்டு. பேரரசின் இன்றைய புகழ் மலர்ச்சியில் கூட அதன் பங்கு பெரிது.பேரரசின் புகழ் உலகின் நாற்றிசையிலும் பரவி,தொலைநாடு சூழ்வரவாளர், அரசியல் வாணர், அரசதூதர் ஆகியோர் வந்து கண்டு பேரரசை வாயாரப் புகழ்ந்தெழுதத் தொடங்கியது இரண்டாம் தேவராயன் காலமே. முந்திய ஆட்சியிறுதியிலேயே 1420-இல் இத்தாலிய நாடு சூழ்வரணர்