158
அப்பாத்துரையம் – 13
பெருங்கோயிலெழுப்பி, அத்தெய்வத்தையே பேரரசின் புதிய தேசீயத் தெய்வமாக்கினான் என்று அறிகிறோம்.
உதயகிரி வெற்றிக்குப்பின் கசபதியாட்சி அத்தமனகிரியில் சரிவது போலச் சரியத் தொடங்கிற்று. விசயநகரப்படைகள் கோட்டை கோட்டையாக, நகரம் நகரமாக, கசபதியின் படைகளைத் துரத்திக் கொண்டே வெற்றி ஊர்வலமாகத் தலைநகர் வாயில்வரை சென்று கசபதிப் பேரரசனைப் பணிய வைத்தே மீண்டன.
முதலில் விசயநகரப் படைத்தலைவன் சாளுவதிம்மனும் பின் நேரே கிருட்டிண தேவராயனும் கொண்ட வீட்டுக் கோட்டை முற்றுகையில் ஈடுபட்டனர். பலமாத முற்றுகையின் பின் விசயநகரப் படைகள் மதிலேறி உட்புகுந்து கோட்டையைக் கைப்பற்றின. கசபதிப் பேரரசன் பட்டத்தரசியும் இளவரசனும், கசபதி ஆட்சியின் பெருந்தலைவர், பெருமக்கள் பலரும் இப்போர் முடிவில் சிறைப்பட்டு வெற்றித் திருநகருக்குக் கொண்டுவரப் பட்டனர். ஆனால் வெற்றித்திருநகர் நடத்திய வெற்றி ஊர்வல விழா கசபதிப் பேரரசு முழுவதும் கடக்கும் பேரரசப்படைகளின் ஊர்வல விழாவைத் தடைசெய்யவில்லை. கொண்ட வீட்டில் - சாளுவ திம்மனையே மண்டலத் தலைவனாக அமர்த்திவிட்டு, அவை மேற்சென்றன.
கோலபள்ளி, நலகொண்டா, வாரங்கல் ஆகிய கோட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாக விரைந்து வீழ்ச்சியடைந்தன. முதல் முற்றுகையைத் தடுக்கப் படைகளுடன் வந்த கசபதிப் பேரரசன் பிரதாபருத்திரன் பெனுகங்கா ஆற்றங்கரையில் நடைபெற்ற போரில் கைய முறியடிக்கப்பட்டான். இப்போரில் கசபதிப் பேரரசன் முழுப்படைபலமும் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. 5 இலட்சம் படை வீரரும் 20 ஆயிரம் குதிரை வீரரும் 1300 யானைகளும் அடங்கிய இம்மாபெரும் படையின் தோல்வி விசயநகரத்தின் புகழை உச்சநிலைக்கு உயர்த்திற்று என்பதில் ஐயமில்லை. தவிர, கோலப் பள்ளிக் கோட்டையின் காவலில் கசபதிப் பேரரசின் பெரும் படைத்தலைவனான பிரகரேசுவர பா த்திரன் தலைமை வகித்தான். போட ஜண்ண மகாபாத்திரன், பிஜிலிகான் முதலிய புகழ்பெற்ற தலைவர்கள் உடனுதவியா யிருந்தனர்.