உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(186

அப்பாத்துரையம் – 13

பின்னாளில் தமிழ் மண்டலத்தின் தலை நகராயிருந்த சந்திரகிரிக் கோட்டையும் அதன் சூழ்புலங்களும் அவர்கள் கைப்பட்டிருந்தன. சோழ நாட்டிலும் அவர்கள் வலிமை பெரியதாயிருந்தது.

போர்சுச்கீசிய ஆட்சியாளன் அல்ஃவான்சோ டி சூசா 1542இல் விசயநகரின் மேல்திசைத் துறைமுகமான பட்கலைத் தாக்கி வடதிசைப் புயல் மரபுகூடக் கண்டு வெட்கமுறும்படி அதனைக் கொள்ளை சூறைகளால் அலைக்கழித்தான். கீழ்திசையில் காஞ்சி நகரத்தையும் கோயில்களையும் கொள்ளை யிடவும் அடுத்த ஆண்டே அவன் திட்டமிட்டிருந்தான்.

குமரி நாட்டரசன் 1543-ல் ஒரு சிறுவனைப் பின்னுரி மையாளனாக விட்டு இறந்தான். திருவாங்கூர் அரசன் சிறுவனையும் அவன் அன்னையையும் சிறையிலிட்டு நாட்டைத் தன்னிடமே ஒப்படைக்கும்படி வற்புறுத்தினான். சிறுவன் பெயர் வெற்றிப் பெருமாள் என்பது. அவன் அச்சமயம் தமிழகம் வந்திருந்த கத்தோலிக்க சமயமா முதல்வர் தூய திரு. சவேரியரின் உதவி நாடினான். திருவாங்கூர் அரசனும் தன் பக்கமாக இருந்துதவும்படி அவனை வேண்டினான். போர்ச்சுகீசியர் நடுவராக அமைந்து அந்நல்வாய்ப்பை முழுதும் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டு வந்தனர்.

தென்தமிழகக் கிளர்ச்சி, கத்தோலிக்க போர்ச்சுகீசிய அட்டூழியங்கள், பேரரசுப் பெருமக்கள் எதிர்ப்பு ஆகிய இந்த மூன்றும் இராமராயனைத் தவிர வேறு எந்தத் தனி மனிதனையும் நிலைகலங்க வைத்து முற்றிலும் கவிழ்த்து விடத் தக்கவை. மூன்றும் ஒருமுகமாக அவன் ஆட்சி ஏற்ற சமயத்திலேயே தம் வரிசைகளைத் தொடங்கின. ஆனால் அவன் மூன்றும் வென்று வெற்றிமுரசும் முழக்கினான்.

தமிழக வெற்றி உலா

இராமராயன் தமிழகத்தில் தன் ஆற்றலை நிறுவ எண்ணிப் பெரும்படையை அனுப்பினான். அதற்கு அவன் மைத்துனன் சின்ன திம்மராயனும் அவன் உடன் பிறந்தான் விட்டலராயனும் படைத் தலைவராக அனுப்பப்பட்டனர். விட்டல ராயன் சந்திரகிரிக் கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். பேரரசின் எதிரிகளை அவன் காட்டு விலங்குகள் போல