உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(234

அப்பாத்துரையம் – 13

அவர்கள் வெற்றி வாகை சூடினர். வல்லம் கோட்டை தஞ்சை வாணனிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்தஞ்சை வாணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பொய்யாமொழிப் புலவர் என்ற தமிழ்க் கவிஞர் 'தஞ்சை வாணன் கோவை' என்ற பாடலேடுயாத்துள்ளனர். அதிவீரராமன் கல்வெட்டுக்களும் இப்போர்ப்புகழ் சாற்றுகின்றன. கல்வெட்டுக்களில் ஒன்றில் தென்காசிக் கலியன் கவிராயன் பாடியதாக வெண்பா ஒன்றும் இடம் பெறுகிறது.

‘பற்றலர்மண கொள்ளு பணிந்தார்க் கரசளிக்கும்

கொற்றம் உயர்க்கும் அறம் கூறுமே - வில்தடம்தோள் வில்லவனை வென்றுகொண்ட வீரமா வில்தடம்தோள் வல்லம்எறிந் தான்ஏந்து வாள்'.

இரண்டாம் வேங்கடன் எழுச்சி

பேரரசன் முதலாம் சீரங்கனுக்கடுத்த ளைய உடன் பிறந்தானான இராமன் தன் அண்ணன் ஆட்சிக் காலத்துக் குள்ளேயே மறைவுற்றிருந்தான். அவன் பிள்ளைகள் சிறுவரா யிருந்தனர். இந்நிலையில் இராமனுக் கடுத்த கடைசி இளவலான வேங்கடனே இரண்டாம் வேங்கடன் (1586-1614) என்ற பெயருடன் பேரரச ஆட்சி கைக்கொண்டான். சீரங்கன் ஆட்சிக் காலத்தளர்ச்சி நீக்கிப் பேரரசு அவன் நாட்களில் மீண்டும் தலைதூக்கிற்று.

இராட்சசித் தங்கிடிப் போரின்பின் சரியத் தொடங்கியது. விசயநகரப் பேரரசு மட்டுமன்று. ஒன்றுபட்டு அதை அழிக்கக் கிளர்த்தெழுந்த தென்னக இஸ்லாமிய அரசுகள் ஐந்தனுள், அப் போரினையடுத்து மூன்றாண்டு களுக்குள்ளாகவே ஒன்று மண் கவ்விற்று. இமத்ஷாஹி மரபினர் ஆண்ட பேரரசை அகமதுநகர் அரசே விழுங்கிற்று. ஆனால் அகமதுநகரும் இதன்பின் நீண்டநாள் வாழவில்லை. தவளையை விழுங்கிய பாம்பு கருடனுக்கு எளிதில் இரையாதல் போல, அகமது நகர் 1595-இல் வடதிசைப் புதிய முகலாயப் பேரரசின் தலைவனான அக்பரால் விழுங்கப்பட்டது. தென்னகத்தின் வீர மூதரசியாகிய சாந்த்பீபி அதன் வீழ்ச்சியைப் பல ஆண்டுகள் தடுத்து நின்றும் இறுதியில்