238
அப்பாத்துரையம் – 13
கொடியெனச் சுழன்று சுழன்று வீரவெற்றி நடனமாடினான். யாசமன் புகழ் தென்னகமெங்கும் பரந்தது. வீழ்ச்சி யூழியில் விசயநகரம் எழுச்சியூழிப் புகழை ஒருகணம் எட்டிப் பிடித்தது போன்ற நிலை ஏற்பட்டிருந்தது. யாசமன் உடன்பிறந்தானான சிங்கனும் இப்போரில் குறிப்பிடத்தக்க பங்கு கொண்டிருந்தான். வேங்கடன் யாசமன் சேவையின் மதிப்புணர்ந்து அவனுக்குப் பேரரசுச் சிறப்புக்கள் செய்து பாராட்டினான்.
இப்போரின்பின் லிங்கமனின் தலைநகராகிய வேலூரைக் கைப்பற்றும்படி பேரரசன் வேங்கடன் தன் படைத்தலைவர்களுள் ஒருவனான தாமர்ல சென்னவேங்கடனுக்குக் கட்டளையிட்டான். காளத்திக்கோமானான அங்கபூகதியும், வந்தவாசித் தலைவனான தாமர்ல வேங்கடப்பனும், பூவிருந்தவல்லித் தலைவனான தாமர்ல ஐயப்பனும் அவன் உடன் பிறந்தவர்கள். அத்துடன் தன் தாய் தந்தையர் பெயராலேயே சென்னசாகரம் என்ற ஒரு பேரேரியையும் கட்டி அவன் புகழ்பெற்றிருந்தான். இப் பல்வேறுபட்ட புகழ்மாலைகளுடன் வீரப்புகழும் அவனை நாடி நின்றது. வேலூருக்கு வெளியே வந்து போரிட்ட லிங்கமனை அவன் 1603-இல் மின்னல் என்ற ஊரருகே நடந்த போரில் முறியடித்து வீறுகொண்டான்.
வேலூருக்கருகிலேயே மற்றும் ஒரு போரில் தாமர்ல சென்ன வேங்கடனும் யாசமநாயுடுவும் லிங்கமனை முறியடித்தனர். இரண்டுமாத முற்றுகைக்குப்பின் வேலூரும் கைப்பற்றப்பட்டது. பேரரசன் தலைநகரையும் அரண்மனையையும் விட வேலூரும் கைப்பற்றப்பட்டது. பேரரசன் தலைநகரையும் அரண்மனை யையும் விட வேலூரும் லிங்கமன் மாளிகையும் சீரும் சிறப்பும் செல்வச் செருக்கும் மிக்கதாயிருந்ததனால், பேரரசன் வேங்கடன் பேரரசின் தலைநகரை மூன்றாவது தடவையாக வேலூருக்கே மாற்றிக்கொண்டான். விசயநகரத்திலிருந்து பெனுகொண்டா வுக்கும், பெனுகொண்டாவிலிருந்து சந்திரகிரிக்கும் 1565-லிருந்து மாறி வந்த பேரரசுத் தலைமை 1603-இல் வேலூரில் நிலை பேறுற்றது.
தாமர்ல சென்னவேங்கடநாயகன் வேலூர் முற்றுகையிலீடு பட்டிருந்த சமயத்தில் பேரரசனும் வேலுகோடி யாசம நாயுடுவும் தெற்கே தொண்டை மண்டலம், சோணாடு ஆகியவற்றி