உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

அப்பாத்துரையம் – 13

புடையது சிவாஜியின் மராத்திய தேசீயம். தென்னகத் தாயாக அமைந்த இப்பேரொளி தொலை தேசீயக் கதிரொளியாகிய தமிழகத்தின் புகழ்க்கொடியை உயர்த்திக் காட்டும் ஒரு வீரக் கொடிக்கம்பமாய் வரலாற்றில் சிங்க நோக்குடன் இலங்குகின்றது. கலையார் தமிழர் இனம் ஒருபால் கவினார் ஒளிச்செந் நிறம்குலவ, நிலையார் வீரத் தெலுங்கரினம் நேரங் கொருபால் நிவர்ந்திலங்க, உலையா மரபின் மலையாளத் தொருபால் சேரர் களிப்ப, ஒளி அலைபாய் விசய நகர மெனும் அருமா மணியின் இசை வெல்க!

கடலிற் பிறந்து முத்தாடிக்

கதிர்பாய் இலங்கை மணிவிரவி மடல்சேர் தமிழ்ப்புத் தமுதூறி மலையார் சேர வளநாட்டில் நடங்கொண்டாடி நற்றெலுங்கின் நளின இசையில் துயிலார்ந்து தடங்கன் னடமார் மலையாரம்

தவழும் தென்மா தவள்வாழி!

பொங்குமாவளம் : குடியாட்சியின் முழு மலர்ச்சி

உலகின் குடியாட்சி மலர்ச்சியில் நாம் மூன்று படிகளைப் பகுத்துக் காண்டல் தகும். அவை நேர் குடியாட்சி, பேராண்மைக் குடியாட்சி, பொங்குமாவளக் குடியாட்சி என்பன. தொழில் பழங்காலத்தில் தமிழகத்திலும், சிந்து கங்கை வெளியிலும் கிரீசு முதலிய நடுநிலக் கடலகப் பரப்புக்களிலும் நிலவியிருந்த நகர் நாட்டுக் குடியாட்சியே நேர் குடியாட்சி. ஒவ்வொரு குடியாட்சிக்கும் குடியாட்சியில் நேரடியான பங்கு இருந்தது. குடிமக்கள் யாவரும் குடும்ப உறவுடைய பெருங்குடும்பமாக அதாவது இனமாக இருந்ததனால் அவர்களிடையே உரிமை உயர்வு தாழ்வுகள் இருந்ததில்லை. பேராண்மை அல்லது மொழி