செம்மொழிச் செல்வர் பன்மொழியார்
திராவிடமாம் குன்றினிலே தீந்தமிழாம் மணிவிளக்காய்த் திகழ்கின்ற அப்பாத்துரையார் பாரிவேள் போன்ற தொரு பரம்பரையின் அடிக்கிளையில் வறுமைதனில் பிறந்த செல்வர்
தென்குமரித் தாயங்கு நீண்டநாளாய்
செய்ததவப் பயனான பன்மொழியர்
இன்தமிழே இவ்வுலக மூலமொழி
எனுங் கொள்கை ஆய்வுவழி நாட்டவந்தார் இளமையிலே ஆங்கிலநன் மொழித்திறனில் அற்புதங்கள் பலநிகழ்த்திப் புகழ்நிறைந்து விளையாட்டில் ஒருசிறிதும் விருப்பமின்றி வேதாந்த சாத்திரங்கள் கற்றுநின்றார் ஆங்கிலத்தில் கலைத்தலைமை பெற்றபின்னும் ஆழ்வறுமை சூழலிலே ஆழ்ந்தபின்னும் இந்தியிலும் புலமைபெற்று இருந்த பின்னும் சித்தாந்தத் தத்துவங்கள் கற்றுநின்றார். திக்கெல்லாம் தீந்தமிழின் புகழ்விளங்கச் சூளுரைத்துச் செம்மொழியின் செல்வரானார் எக்கணமும் எந்தமிழின் மூச்சேயாகி தொண்டர்க்குத் தொண்டராய் அறிவுரைத்தார் தென்னாட்டுப் போர்க்களங்கள் என்னுமேட்டில் வரலாறு வரைவதிலே புதுமை கண்டார் தென்னகத்தின் பண்பையெலாம் வடித்தெடுத்துத் தூயதமிழ் ஏடாகத் தீட்டி வைத்தார்
உதவு
- இ.சு.முத்துசாமி, எம்.ஏ., பி.டி.,
தமிழ்மண் பதிப்பகம்
2, சிங்காரவேலர் தெரு. தியாகராயர் நகர், சென்னை 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி
- 9444410654