72
அப்பாத்துரையம் – 13
காட்டுகின்றன. மையப்பொகுட்டு அதன் பின்னரே தன் பூந்துகள் மணம் பரப்பி, தேனவிழ்த்து, வண்டுகளை விருந்துக்கழைக்கிறது. மலர்ச்சியுள்ள மலர்ச்சியாக மலர்ச்சிகளை அடுக்கிக் கொண்டே செல்லும் இந்தப் பொங்கு தாமரை மலர்போல விசயநகரமும் பல மலர்ச்சிகள் கண்டது. புறவிதழ் மலர்ச்சியாகிய முதற்பேரரசரின் பின் வந்த பெருவீரத்தலைவர் அகவிதழ் மலர்ச்சியாகப் பேரரசு வளர்த்த மாபெருஞ் சிற்பிகளாய் விளங்கினர். பேரரசின் உச்ச உயர்வுக்குரிய காலத்துப் பேரரசர்களும் பெருந் தலைவர் களும் மலரின் மையப்பொகுட்டாக, அதில் பூந்துகளாக விளங்கினர். சரிவுக்காலப் பேரரசர், பெருவீரர் கூடப் பொகுட்டினடியிலுள்ள தேனறைகளையே நினைவூட்டுகின்றனர்.
பேரரசின் புகழே, தேசீயவளமே அதன் பொலிவு, பூந்துகள் மணம், தேன்சுவை ஆகும். அந்தப் பொலிவும், மணமும், சுவையும் நாடும் வண்டினமாகவே தென்னகத்தின் புதுமலர்ச்சித் தேசீயம் திகழ்கிறது.
எந்த நாட்டிலும் இனத்திலும் தேசீயத்தின் ஆற்றல் அவ்வக் காலத்தில் வீரப்பேரரசர், பெருவீரர், பேரறிஞர், கலைஞர்களைத் தோற்றுவித்து மாவளம் காண்டல் இயல்பு, நாகரிகத்தில் மிகமிகப் பிற்பட்டவை என்று கருதப்படும் இனங்களும், நாகரிகமற்றவை என்று கருதப்படும் இனங்களிலேயே மிகமிகப் பிற்பட்ட இனங்களும் கூட இப்போது விதிக்கு விலக்கல்ல. ஆயினும் தனிப்பட்ட தேசீய மலர்ச்சிக்குரிய காலத்திலன்றி இவர்களை ஒருங்கே ஒரு காலத்திலோ, அடுத்தடுத்துத் தொடர் பாகவோ காண இயலாது. எடுத்துக்காட்டாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னரே உச்ச உயர்படி நாகரிக நிலையை எட்டியிருந்த உலகின் முதன் முதல் தேசீயமான தமிழினத்தில் கூட, சங்ககாலத்தில் நாம் புலவர்களி டையேதான் பல ஒண்மணிகளை ஒருங்கே திரளாகவும் தொடர்பாகவும் காண்கிறோம். அரசியலில் பதிற்றுப்பத்தில் பாடப்பட்ட சேரப் பேரரசர்களைத் தவிர வேறு எங்கும் தொடர்ந்து பல வீரப் பேரரசரைக் காண்டல் அரிது. இது மட்டுமன்று. இச்சேரப் பேரரசரிடையிலும் சரி, இடைக்காலப் பாண்டிய, சோழப் பெரும் பேரரசர் காலத்திலும் சரி தொடர்பான வீரப்பேரரசர் களை நாம் காணும் அளவில்கூட விசயநகரத்துக்குரிய