உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
86 ||

அப்பாத்துரையம் - 14



ஆண்டு புதுநாகரிக வாழ்வு தொடங்கிய நிலையை காட்டுகிறது.

து

இலக்கண மரபில் இப் புதுவள, புதுநாகரிக வாழ்வின், மையம் என்ற முறையில் மருதநிலமே, இவ்வூழியில் சிறப்புப்பட நாடு எனப்பட்டது. (பின்னாட்களில் பாண்டிய நாடே சிறப்புப்பட தமிழ்நாடு, தென்னாடு எனச் சுட்டப்பட்ட மரபினை இது நினைவூட்டுவது ஆகும்). அரசனும் இதற்கு ஏற்ப இந்நாட்களில் நாடன் என்றும், அதே மூச்சில் வெற்பன் (மலை யாண்டவன்), துறைவன் (கடலாண்டவன்) என்றும் அழைக்கப் பட்டான்.இவற்றை ஒட்டியே, மருதநிலத் தெய்வமாகிய வேந்தன் அல்லது இந்திரனும் ஐந்திணை உட்கொண்ட நாட்டின் தெய்வமாக உயர்த்தப்பட்டான். வேளிர் அரசர் தலைமையில் இத் தேசியத் தெய்வத்தின் பெயரால் தேசிய அளவிலேயே இந்திரவிழா எடுக்கப்பட்டது. (கோ மரபில் முன்னம் மலர்ந்த அம்மையப்பனுடன், இப்போது மலர்வுற்ற கோவேள் அல்லது கோவரசனான இந்திரனும் ஒன்று படுத்தப்பட்ட இவ்வூழி மரபையே (தென்கிழக்காசியப் பரப்பு நமக்குச் சுட்டிக் காட்டுகிறபடி). திருக்குறள் காலமுதல் காப்பிய காலம் (கி.பி. 3-6 நூற்றாண்டுகள்). தேவார பெரியபுராண காலம் வரை நாட்டு வாழ்த்து, இறைவாழ்த்து, அரசு வாழ்த்து ஆகியவற்று டன் அவற்றுக்கும் முந்துநிலையாக மழை வாழ்த்தும் (வான் - வானவர், அந்தண்மை. அந்தணர் வாழ்த்துகள்) அதுபோலவே காப்பியங்களிலே, நாட்டுப்படலம், நகரப்படலம் ஆகியவற்றுடன் ஆற்றுப்படலமும் சிறப்பிடம் பெற்றன.

தமிழகத்தின் பொங்கல் விழா, காவேரியின் பதினெட்டாம் பெருக்கு, பரிபாடல் விரித்துரைக்கும் வைகைப் புனல் விழா, இந்தியாவின் போகிப்பண்டிகை (போகி - இந்திரன்), கேரள மாநிலத்தின் ஓணவிழா, (தென்னகப் பெருவேந்தன் மாவலியின் புகழ் நினைவு விழா) ஆகியவை (மேலையுலகின் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஈத் பண்டிகை ஆகியவைகூட) வேந்தன் அல்லது இந்திரன் பெயரால் நிகழ்த்தப்பட்ட இப் பண்டைப் பெருந் தேசிய மக்கள் விழாவின் மரபின் வந்தவையேயாகும் என்னல் தகும் (இது மனித இன நாகரிக உலகளவில் ஆய்வுக்குரியது).