உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
94 ||

அப்பாத்துரையம் - 14



||--


இடையேயுள்ள இணையறாத் தொடர்பை, மேலே சுட்டப்பட்ட கட்டியர் மரபுக் குறிப்பு முனைப்பாக எடுத்துக்காட்டுகிறது. நம் காலம்வரை, இதுபோல் நீடித்து வரும் நெல்லை மாவட்டக் கோட்டை வேளாளர் மரபு, திருச்சி மாவட்டக் கோட்டைக் கள்ளர் மரபு, பாண்டிய நாட்டுக் கோட்டை வணிகர் மரபு ஆகியவையும் இதே தொடர்புக்குரிய பரவலான சான்றுகள் ஆகும்.

வடஇந்தியாவில், இரசபுதன மாநிலத்தில், அம் மாநிலப் பெயரே (இரசபுத்திரர். இராசன்யர் - வேளிர்; இரசபுதனம் வேள்நாடு), அதன் பண்டை வேள் புலத் தொடர்பு சுட்டிக் காட்டுவதாகும். அதனை ஒட்டிய மேலை-- இந்தியப் பரப்பு முழுவதுமே இன்றும் இராட்டிரம் (வேள்நாடு) என்ற பண்டை வேள்புல மரபுக்குரிய பெயரடியாகக் குசராத் (கூர்ச்சர ராட்டிரம்), சௌராட்டிரம் (கொங்கு நாட்டு வேட்டுவர் குடித்தொடர்பு சுட்டும் வில்லியர் என்பவர் பிற்பட்ட பழங்குடியினத்தவராக வாழும் பகுதி (சு-நல்ல; ராட்டிரம்; நகர்-நாடு அரசத் தொகுதி அல்லது வேள்நாடு), மகாராட்டிரம் (பெரிய வேள் நாடு) என்ற நாட்டினப் பெயர்களுடையதாக நிலவுகிறது காணலாம்.

அரசியல் மாறுபாடுகளாலோ, போர்க்காலக் கொந்தளிப்பு களாலோ உலகில் பொதுவாக ஏற்படும் சமுதாயக் குழப்பம், மக்கள் வாழ்க்கைச் சீரழிவு, பொருளியல் நிலை குலைவு ஆகியவை பொதுவாக இந்தியாவில் அயலாட்சிக் காலம் வரை ஏற்பட்டதில்லை என்று அறிகிறோம். பண்டைப் பெருங் கொங்குத் தமிழகத் தொடர்புடைய மேலை இந்தியப் பரப்புக்கு இது சிறப்பு வகையில் பொருந்திவந்துள்ள நிலை ஆகும். இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் அத்தகைய மேல்நிலை ஆட்சிமாறுபாடுகள் பற்றிக் கவலைப்படாமல் இந்திய மக்கள் சமுதாயம், தன்னாட்சி அடிப்படையிலும் குடியரசு மரபு முறையின் அடிப்படையிலும் அமைந்த தம் மரபு நெறியில் வீறமைதியுடன் வாழ்வுநடத்திக் கொண்டேயிருந்தது. இதனைப் பல வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டியேயுள்ளனர். ஆனால். இது சாதிமரபின் பின்னணியில் உயிர் மரபுடன் நிலவும் குடியரசுப் பண்புக்குரிய உயிராற்றல் என்பது காணாமல், அதைச் சாதி மரபு அல்லது சாதி வருண மரபுக்குரிய உயிரற்ற திறம் என்று