உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
96 ||

அப்பாத்துரையம் - 14



பின்பற்றப்பட்டு வரும் ஒத்திசைவுப் பண்பின் கொங்கு நாடு கடந்த அகல் தேசியப் பரப்பீடேயாகும். ஏனெனில், அத் திட்டத்தின் மையக் கூறுகள் இரண்டுமே தமிழகத்துடனும், கொங்குத் தமிழகத்துடனும், தொடர்புடையவை ஆகும். கோயில்களிலும் திருமணங்களிலும் ஒரே சமக்கிருத மொழி மந்திரங்களை வழங்குவது, அவர் இயக்கத்தின் பெயரால் வைதிகத் திருமணங்கள் என்றே இன்றும் வழங்கப்படும் திருமணங்களில் தாலிகட்டினை மைய வினை முறையாக்குவது என்பவையே அம் மையக் கூறுகள் ஆகும்.

சங்க காலத்தையடுத்து எழுந்த சைவ வைணவ பக்தி இயக்கத்தின் பயனாக, இந்தியாவெங்கும் தென்கிழக்காசியா வெங்கும் இசை நாடக மரபுகளோடியையத் தமிழகப் பக்திப்பாடல்களும் தமிழ் மந்திரங்களும் பரவின. ஏனெனில், தமிழே அன்று அப் பரப்பெங்கும் போட்டியற்ற தெய்வ மொழி, இலக்கிய மொழி, பண்பாட்டு மொழி, ஆட்சி மொழியாய் லங்கிற்று. ஆனால், அடிகளார் காலத்துக்குள் பாளி பாகத சமக்கிருத மொழிகள் மட்டுமன்றி, தமிழுடனொத்த பல இந்திய, உலகத் தாய்மொழிகளும் இலக்கிய நிலைக்கு உயர்ந்து வந்தன. தமிழ் இலக்கிய மரபுகள், தமிழ் மணவாழ்த்து மரபுகள், பக்தி காலத் தமிழ்ப்பாடல்கள், தமிழ் மந்திரங் களினிடமாக, தாய்மொழிகளிடையே பொது வழக்காகச் சமக்கிருத பாளி பாகத மந்திரங்கள் பரப்பப்பட்ட நிலைக்குரிய விளக்கம் இதுவே. அம் மொழிகளில், சிறப்பாகச் சமக்கிருத மொழியில், இக் காலத்துக்குள்ளாக தமிழ்ப் பக்திப் பாடல்கள், மந்திரங்கள் முதலியன மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன, மொழிபெயர்க்கப் படத் தொடங்கின. சமக்கிருத மந்திர மரபு என்பது இவ்வாறாகப் பழைய தமிழ் மந்திர மரபுகளிலிருந்து இயல்பாய் மலர்ந்த ஒரு பிற்கால மரபுத் திரிபேயாகும்.

இந்து சமய மறுமலர்ச்சியின்போது இந்தியாவெங்கும் பரவிய கோயில் மரபுக்குரிய மொழியாகிய தமிழ், இவ்வாறு சமக்கிருத மந்திர மரபாகத் தமிழக மையத்திலிருந்தே திரிபுற்று வழங்கத் தொடங்கிற்று. உலகில் முதல் முதலாகச் சமக்கிருதம் தென்னக எழுத்துருவில் தென்னகத் தொன் மரபுகளுடனேயே, தென்கிழக்காசியாவிலேயே, காணப்படுவது இதனாலேயே

யாகும்.