உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 105

ஐரோப்பிய இன நாகரிகம் என்று முந்திய வரலாற்றாசிரியர் ன கூறுபவையாவும் அவ்வினத்தவர் படிப்படியாகத் தென்திசை நாகரிக உலகுடன் தொடர்புபட்ட நிலையில், தொடர்புபட்ட அளவில் வளர்த்துக்கொண்ட நாகரிகங்களன்றி வேறல்ல என்பதை உலகளாவிய வரலாற்றுக் கண்ணோட்டம் தெளிவாகக் காட்டும். கிரேக்கரும் உரோமரும் (செமிட்டிய இனத்தவரும்கூட தமக்கு முற்பட்ட தொல்பழங்கால நாகரிகங்களின் நகர், நாடு, அரசுமரபும் அன்னை வழிபாடும் கோயில் வழிபாட்டு மரபும் பின்பற்றியவர்களேயாவர் என்பதும் இங்கே காணத்தகும்.

இந்தியாவுக்கே உரிய சாதி வருண முறையும் சரி, நாகரிக உலகுக்குப் பொதுவான மூவகுப்பு முறையும் சரி, இரண்டுமே முற்றிலும் இன அடிப்படையிலோ, பொருளியல் அடிப்படை யிலோ மட்டும் விளக்கம் பெற முடியாதவை. ஏனெனில், இவை யாவுமே நாகரிக உலக முழுமைக்கும் பொதுவான பண்புகள், பொதுவான சூழல்கள். அவை நாகரிக உலகுக்குப் பொதுவான மூவகுப்பு முறைமையின் வேறுபாடுகளைக்கூட விளக்க முடியாது. இப் பொது மாறுபாடுகளையும், கீழ்த்திசையிலும் இந்தியாவி லும் இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் ஏற்படும் வேறுபாடு களையும் நாம் அந்த அந்தக் கால இடங்களின் வரலாற்றுச் சூழல், அரசியல் சூழல்களில்தான் தேட வேண்டியவர்களாகிறோம்.

தவிர, பொதுவுடைமை இயக்க, சமதரும இயக்க மூலவர்களான கார்ல் மார்க்சு, ஏங்கெல்சு, லெனின் ஆகியோரின் கோட்பாடுகள் சுட்டிக் காட்டுகிறபடி, பொருளியல் சமுதாய இயல் உயர்வு தாழ்வுகள் தனிமனி தனின் தற்காலிக உயர்வு தாழ்வுகளாக மட்டும் நின்றுவிடுவதில்லை; அவை சமுதாய வாழ்வுகளுடனும், அவற்றுக்குரிய பழக்க வழக்க மரபுகளுடனும், சமய ஒழுக்கமுறைக் கருத்து மரபுகளுடனும் சட்டங்கள், ஆட்சியமைப்பு, ஆட்சிமுறை ஆகியவற்றுடனும் பின்னிப் பிணைந்து தொடர்பு கொண்டே வருபவை ஆகும். இத்தொடர்பு களின் மூலமே அவ்வயர்வு தாழ்வுகள் முதலாளித்துவ சமுதாயத்தின் அல்லது சமய சமுதாயத்தின் நிலையான உயர்வு தாழ்வு வகுப்புகளாக வளரும் ஆற்றலைப் பெற்று வந்துள்ளன, வருகின்றன. சமதருமவாணர்கள், பொதுவுடைமை யாளர்கள் பெற்றுள்ள இந்தப் படிப்பினைகளே அரசியலைக் கைப்பற்றிச்