உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 113


தற்காலக் கொங்கு நாட்டில் சிறப்பாக மூன்று ஊழிகளுமே போதிய அளவில் செயலாற்ற முடியாமல் போயின. அதன் ஊன்றிய குடியரசு மரபும் குடியரசுப் பண்பும் இதனைத் தடைப்படுத்தி நின்றன, தடைப்படுத்தியே வருகின்றன. இது கீழே விளக்கப்பட இருக்கின்றது.

ந்தியாவின் முடியரசர்களிடையே, தமிழக மூவேந்தர் (மற்றும் மகதப் பேரரசர்) போன்று வேளிரிணைவால் அமைந்த தொல்பழமை வாய்ந்த இயல் மரபினரும் உண்டு! பல்லவர் (பழந்திரையர் மரபினர்), கங்கர், வாணர், கடம்பர், சளுக்கர், இரட்டர், யாதவர் (தேவகிரி ஆண்ட ஆய் மரபினர்) போன்று வேளிர் மரபிலேயே வந்த புது அரச மரபினரும், வடமேற்கு ஓரக் கணவாய்கள் வழி இந்தியாவுக்கு வெளியேயிருந்து வந்து இந்தியருடன் இந்தியராகக் கலந்துவிட்ட பார்த்தியர். ஊணர் போன்றாரின் அயலின அரசுகளும் உண்டு. தவிர, தோள் வலியாலும் வாள் வலியாலும் அரசுரிமை நாடிப் பெற்றவர்களும் அரச மரபின் உட் பூசல்களிடையே மரபுரிமை பெற்றும் பெறாமலும் தம் தனி வல்லமைகளாலோ செல்வாக்காலோ முடியுரிமை கொள்ள முனைந்தவரும் பலர். அத்தகு சூழல்களில், இயல்பாகவே பெருமக்கள் வகுப்பினரிடையே பலரும் புதிய மரபுகளுக்கு ஆதரவு காட்டத் தயங்கி ஆர்வ - ஆதரவாளர், எதிர்ப்பாளர், நடுநிலையாளர் எனத் தம்மிடையே பிளவுற்றுப் பிரிவுறலாயினர்.

-

பல்லவர் போன்ற புதிய மரபுக்குரிய அல்லது பார்த்தியர், குசாணர், ஊணர் போன்ற அயல் மரபுக்குரிய அரசர் பேரரசர்கள் இவ்வகைப்பட்ட புதிய சூழ்நிலைக்கு ஆளான போது, தமக்கு ஆர்வ ஆதரவு தர முன்வந்த பெருமக்களையும் பிறரையும் மற்றப் பெருமக்களிடமிருந்து பிரித்து உயர்த்திப் புதிய உயர்வகுப்பினர் ஆக்கினர், தமக்கு ஆதரவு வலிமை வழங்கத்தக்க இனமரபு, மொழிமரபு, சமயமரபு ஆகியவற்றையும் அவர்கள் தேடி அணைத்து உயர்த்தவும் முற்பட்டனர். அத்துடன் எதிர்த்தவர்களின் மொழிமரபு சமயமரபுகளை, அவர்கள், இதுபோல மற்றப் பெருமக்கள் படிநிலையிலிருந்தும் நீக்கிப் பொதுமக்கள், அல்லது அவர்களிலும் தாழ்ந்த கீழ்ப்படி நிலைகளுக்குத் தள்ளினர்.