உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 121

வீரரையும், சொல்லை ஏராகக் கொண்டு சுவை நலப் பயிர், அறிவுப்பயிர்,பண்புப் பயிர் வளர்ப்பவர் (சொல்லேருழவர்) எனப் புலவரையும் இன உழவராகவே மதித்தார். வேளிரையும் இதுபோலவே அவர் வீறாண்மை, திறலாண்மை, அறிவாண்மை, பண்பாண்மை ஆகிய ஏர்கள் கொண்டு மக்கள் வாழ்வு வளப் பயிர், பண்பு வளப்பயிர் (வேளாண்மை) வளர்ப்பவரெனவே கொண்டார் என்பதில் ஐயமில்லை, 'நாடென்ப நாடா வளத்தன' என்று அவர் நாட்டுக்குத் தந்த விளக்கம் இதனைக் காட்டும். சங்க காலப் புலவர்கள் கற்புடைப் பெண்டிரை இது போலவே தம் ளமை நலமும் பண்பு நலமும் ஏராகக் கொண்டு கணவன் வீரம் பாய்ந்த மார்பையே நிலமாக உழுது குடும்ப நலம், வாழ்க்கை நலம், நாட்டு நலம் ஆகியவற்றை விளைவிப்பவர் என வருணி துள்ளனர்.

மேலைக் கிறித்துவ உலகில், மக்கட் பண்பார்ந்த ஆன்மிக ஆட்சி யாளரை இதே மரபில் நின்றே சமயவாணர் இன மேய்ப்பர் (Pastor, Spiritual Shepherd) என்று குறிப்பது காணலாம். ஆனால், சமய ஆட்சியையும் குடும்ப சமுதாய ஆட்சியையும், நாட்டாட்சி, இன ஆட்சியையும் ஒரே ஆட்சியாகக் கொண்ட வேள்புலக் குடியரசு மரபில் வந்த தமிழர் இவையெல்லாவற்றையும் உள்ளடக்கிய அவ் இலக்கியல் குடிமக்கள் ஆட்சியில் தன்மையையே வேளாண்மை, வேள்வி என்றனர். அதனைப் பண்பாகக் கொண்ட பண்பாட்சியாளரையே (பண்பு சான்ற குடியரசரையே) வேளாளர் என்றனர்.

இன்று இசைவேளாளர் என்றால் பாடும் வேளாளர் என்றும் வணிக வேளாளர் என்றுமே நம் காலத் தமிழர் எண்ணுகின்றனர். அத் தொகைச் சொற்களின் தமிழ் மரபுப் பொருள்கள் இவையல்ல; இசைக் கருவிகளை ஏராகக் கொண்டு இன்ப, பேரின்பப் பயிர் வளர்ப்பவர்கள், வாணிகத்தை அல்லது கடல்நில வாழ்வை ஏராகக் கொண்டு வாழ்வு வளப்பயிர் வளர்ப்பவர்கள் (தமிழ்ச் சொல் ஏர்-கலப்பை, அழகு, வாழ்க்கை நலம்) என்பவையே அம் மரபுக்குரிய பொருள்கள் ஆகும்.

வணிகர், வாணிகம் ஆகிய (வண்மை, வளம் ஆகியவற்றுடன் தொடர்புடைய) சொற்கள் தமிழில் மட்டுமன்று, சமக்கிருதத் திலும் உண்டு. ஆயினும் சமக்கிருத மரபில்கூட கடைவருண