உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 123

‘வேளாண் மாந்தர்க்கு


உழுதூண் அல்லது பிறிதூண் இல்லை'

இங்கே உழுதூண் (உழுது ஈட்டிய உணவு உண்ணுதல்) பிறிதூண் (பிற வழியில் ஈட்டிய உணவு உண்ணுதல்) இல்லை (எதிர்மறை வலியுறுத்து) ஆகிய அரிய வழக்குகளின் பொருட் பண்புகளை உரையாசிரியரும் பிறரும் காணாது, குடியரசு மரபு மறந்த தம் கால மயக்கங்களுக்கேற்றபடி பொருள் கூறிச் சென்றனர். உழவு, உழைப்பு ஆகிய சொற் பகுதித் தொடர்புகளும் அவர்கள் கால ஊழி காணாதவை ஆகும்.

பேரரசன் அவுரங்கசீப் கிட்டத்தட்ட இந்தியா முழுதாண்ட நிலையிலும் தலையணி தைத்தும் வேதநூல் படி செய்துமே தம் வாழ்வு நடத்தினார். உலகில் எந்தப் பேரரசும் காணாத பெருவளம் பெருக்கிய இங்காப் பேரரசர், தம் உணவுக்குத் தாமே உழைத்தனர், தமிழக மரபிலேயே ஏகம்பவாணரும், சடையப்ப வள்ளலும் ஆயிரவேலி, ஆயிர ஏர் படைத்தவராயினும், தாமே முதல் 'ஏர் பிடித்து' உழைத்து உண்டு பிறரையும் உண்பித்தவர் ஆவர். தொல்காப்பிய நூற்பா குறித்த தமிழ்க் கருத்து மரபு இதுவே. வேளாளர் என்பவர் வள்ளுவர் பண்பு வழுவாது தாமே உழுது உண்டு (உழைத்துப் பெற்ற பொருளே தாமும் துய்த்து) அது கொண்டே உலகு புரத்தற்கும் உரியர். இது பிற்காலத்தவர் து கருதியது போல வேளாளர்க் குரிய புகழ்ப் பண்பு அல்லது புலவர் பாடும் சிறப்புப்பண்பு அன்று-வேளாளர் என்ற சொல்லே குறித்த (வேள் நிலைப் பண்பாட்சியாளர் என்ற) பொருள் ஆகும்.

வேளாளர் இனத்துக்கே உரிய காப்பியம் என்று கருதத் தக்கது ஏர் எழுபது. அதனைப் பாடிய கம்ப நாடர் திருவள்ளுவரைப் போலவே வேளிர் பெருமைகள் (அரச மரபினர் பெருமைகள்), சமயவாணர் பெருமைகள் ஆகியவற்றையெல்லாம் வேளாளர் பெருமையாகப் பாராட்டத் தவறவில்லை. குடிமன்னர், பண்பு மன்னர், வணிக மன்னர் என்று அவர்களைப் புகழவும் அவர் தயங்கவில்லை. ஆனால், திருவள்ளுவர் வேளிருக்குரிய நேரடிப் பெருமையாகக் கூறியவற்றையெல்லாம் (வேள்வி, வேளாண்மை) அவர் உழவுக்கு, உழவர்க்கும் மட்டுமே உரியதாகப் பாடுகிறார். அவர் காலத்துக்குள் ஏற்பட்ட அரசியல், சமய, சமுதாய மாறுதல் களிடையே, வேள் மரபின் அம் மும்மரபுக் கூறுகளும் மறக்கப்