உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 127

சாதி மரபுகளின் படிநிலையானது வகுப்பினுள் மட்டுமின்றி வகுப்புக்கு வகுப்பு அதாவது வருணத்திற்கு வருணம் என்ற நிலையிலும் உயர்த்தப்பட்டும் தாழ்த்தப்பட்டும் மாறுபட்டு வந்தது.

வேள்புலக் குடியரசர் ஊழியில், மேலே சுட்டியபடி, வகுப்பு வேறுபாடே கிடையாது. அறிஞர் ரூசோ(18ஆம் நூற்றாண்டு), அறிஞர் கார்ல் மார்க்ஸ் (19ஆம் நூற்றாண்டு) ஆகியோர் இதனையே ஆதி சமதரும அல்லது ஆதிப் பொதுவுடைமைச் சமுதாய ஊழி என்று குறித்தனர். அத்துடன், இவ்வூழியில் கோவரசர் அல்லது குடியரசருடன் அவர்கள் சார்ந்த குழுவின் எல்லாக்குடிமக்களும் உறவினரே-பிறப்புவழியுறவு, மணவழியுறவு அல்லது இவற்றிற்கு ஈடான உடன் வாழ்வுறவு, அல்லது உணர்வுறவு அல்லது மரபுறவு அல்லது பண்புறவு பேணியவர்களேயாவர். வேளிர் வழி வந்த முடியரசரும் பிறரும் தொடக்கத்தில் இம் மரபு மறவாது அதனை உணர்வு வழி மரபாகக் கொண்டவர்களேயாவர்.

உறவு முறைகளைச் சமுதாய எல்லை முழுவதிலும் கணித்து எண்கணிப்புப் போலப் பரப்பி உறவுப் பெயரிடும் ஆற்றல் இன்னும் உலக மொழிகளிடையே தமிழுக்கு மட்டும் உண்டு என்பது ஓர்ந்து காணத்தக்க செய்தி ஆகும். மானியங்கள், சிறப்புரிமைகள் ஆகியவற்றுடன் சேர்த்து மன்னர் வழங்கிய பட்டங்களில் தலையானவை, இத்தகைய உணர்வுறவுத் தன்மை வாய்ந்த உறவுமுறைப் பட்டங்களேயாகும். அதே சமயம் அப் பட்டங்களைப் பெறுபவரின் அறிவு, திறமை, பதவி, சேவை, தனி மரபுகள், தனித்துறைச்சிறப்பு ஆகியவற்றைக் குறிப்பவையாகவும் பல பட்டங்கள் அமைந்தன.

பண்டை ஆய்வேள் மரபில் வந்து அரச, பேரரச மரபினராகவே ஆண்ட யாதவரும் இரட்டரும் அம் மரபுகளே சுட்டிக் கோன், கோனார்(கோவரசர்), மாதவர், ரெட்டி (ராஷ்ட்ரம்-வேள் என்ற சொல்லின் மரூஉ; ச்ரேஷ்டி-முதலியார் என்பதன் மரூஉ எனவும் கொள்வதுண்டு) என்றும் வழங்கப் பட்டனர். ராஜு(ராஜ்-வேளிர்), ராயர் அல்லது அரையர் (அரசர்:அரை, வரை-மலை), முத்தரசர், முத்தரையர் அல்லது முத்துராஜா (முத்து-அரசர்; மூன்று தரை ஆண்டவர் என்று