உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 129

அரசகுருவாக மூன்றாம் ஊ ழியில் உயர்த்தப்பட்ட பெருங்குடி மக்களும் பிறரும் அவ்விரு ஊழிகளிலுமே ஐயர் (தந்தை), ஐயங்கார் (ஐயன்-தந்தை, காரு (தெலுங்கு மொழியின் மதிப்பு விகுதி), ஐயா (தந்தை, பாட்டன்), போற்றி (நாஞ்சில் நாட்டு வழக்கு: பாட்டன், போற்றுதற் குரியவர்) எனச் சிறப்பிக்கப் பட்டனர். வட இந்தியாவெங்கும் பண்டிதர் (காசுமீர பிராமணர்), பண்டா (ஒரிய பிராமணர்), பண்ட் (வடமாநிலப் பிராமணர்), பட்டர் (படித்துப் பட்டம் பெற்றவர்) என்ற விருதுகள் வழி வழி மரபாகிச் சாதிமரபு (பெரும்பாலும் பிராமண மரபு) குறிக்கின்றன.

அரசியல் வகுப்பாக மாறாத நிலையில், இந்தியாவெங்கும் கோயில் குருமார் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவே வாழ்கின்றனர். தமிழகத்தில் ஆண்டி (ஆண்டை-கடவுள், முருகன்), பண்டாரம் ஆகியோர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு களுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.பண்டை அன்னை வழிபாட்டாளர் மரபு (கடவுளடியார் வகுப்பு) நிலையும் இதுவே. அது தென்னகத்தில் இசை வேளாளராகவும் வடமேற்கு இந்தியாவில் நட், நட்வர் எனும் தாழ்த்தப் பட்ட மரபாகவும் நிலவுகின்றது.

சங்ககாலத்தில், வணிகராவோர், செட்டி - எட்டி காவிதி எனப் படிப்படியாக உயரிய பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தனர். இவற்றுள் செட்டி (செட்டு-கட்டுதிட்டம்), வாணிகக்குழு; சமக்கிருதம்: ச்ரேஷ்டி; குசராத்தி: Shetty, Sait) மட்டுமே இன்று வழங்குகிறது. பன்னாட்டு வாணிகம் கடல் வாணிகம் சுட்டிய மற்ற இருபட்டங்களும் வழக்கிறந்தன.

கப்பற்படைத்துறை

படைத்துறை, கப்பல்துறை, ஆகியவற்றின் சார்பில் படையாட்சி (வன்னிய மரபினர்), முதலி (படைமுதலி-Lieutenant), நாய்கர் (நாய்கன், மாநாய்கன் - கப்பல் தலைவன், நாவாய்-கப்பல்), நாயர் (ஐதர் அலி காலம்வரை கேரளப் படை வீரமரபினர்), நாயுடு (அவுரங்கசீப் காலம்வரை ஆந்திரப்படைவீரர்) என்ற பட்டங்கள் வழங்கின. அயலாட்சிக் காலத்திலும் இன்னும் கூட நாயக் என்பது (Lieutenant Naik) படைத் துறைப் பட்டமாகவே வழங்கி வருகிறது.

குடும்ப மரபுத் தொழிலாகிய நெசவுத் தொழில் உயர்வுடையதாகக் கருதப்பட்டதனால், அத்தொழிலாளர்