உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 133

அவற்றுள் கொங்குத் தமிழகத்தின் தனித் தன்மைகளையும் முத்தள ஊழிகளின் செயற்பாடுகளே விளக்குகின்றன.

இந்தியாவின் வடமேற்கு, வடக்குப் பரப்புகளில் ஆட்சியாளரிடையிலும் பழைய ஆட்சி வகுப்பாகிய நடுத்தர வகுப்பினரிடையிலும் அயலினத்தவர் மிகுதி கலப்புற்றிருந்தனர். புதிய வருணமுறைச் சமுதாயத்தில் எளிதாகத் தம் உயர்வை நிலைநாட்டிக் கொள்ளும் ஆர்வத்தால் அவர்கள் புதிய வகுப்பினருடன் மனமார ஒத்துழைத்து இரண்டாம் அல்லது மூன்றாம் வருணமாக இடம் பெற்றனர்.

வேளிர் மரபை விடாது காத்த இராசஸ்தான் (இரசபுதனம்: ராஜ், ரஜபுத்ர-வேள்) பரப்பின் வீர மக்கள் புதிய இசுலாமியப் படையெழுச்சியைத் தடுக்க உதவிய நிலை ஏற்பட்டபோது அவர்களுக்கு தனிச்சலுகையாக அக்கினி மரபு என்ற புதியமரபு படைத்துருவாக்கி ஒதுக்கீடுசெய்யப்பட்டது. ஆனால், முகலாய ஆட்சி, சிறப்பாக அக்பர் ஆட்சி, புதிய வகுப்பினரை மேலும் உயர்த்திய நிலையிலேயே அதே வேளிர் மரபினராகிய மராத்தியர், தென்மராத்தியராகிய கொங்கணியர் (சிவாஜி மரபினர்) ஆகியோருக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டது. (வான்புகழ் அறிஞர் அண்ணாவின் சந்திர மோகன் நாடகம் இக் காட்சியை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது).

க்

தமிழகத்திலிருந்து குடியரசு மரபிலூறிய கொங்குப் பரப்புக் கடந்தே வடபால் பரவிய சைவ, வீரசைவ, வைணவ சமய எழுச்சிகள் காரணமாக, கோயிற்குருக்கள் உட்பட்ட பழைய ஆட்சி வகுப்பினர் அனைவரிடையேயும் (பக்திப் பண்பில் ஈடுபட்ட புதிய வகுப்பினரிடம் கூட) சாதி வருண எதிர்ப்பு முனைப்பாயிருந்தது. (பகவத் கீதையும்) ஞான தேவரது பகவத்கீதையின் மராத்திய மொழிபெயர்ப்பும் இதற்கு முனைப்பான சான்றுகள் ஆகும்). இப் பரப்புகளே புத்த சமண நெறிகள் நீடித்து நிலவிய பகுதிகள் ஆகும். ஒரே வருணம் என்ற முறைமை தென்னகம் முழுவதும் செயற்படுத்தப்பட்ட நிலைக்குரிய விளக்கமும் இதுவே. வடமாநிலத்தைப் போலவே இத் தென்பரப்பிலும் பழைய ஆட்சி வகுப்பினர் அனைவருமே நான்காம் வகுப்பு (சூத்திரர்) என்ற புதிய இடைநிலை வகுப்பில் சேர்க்கப் பட்டனர்.