உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
150 ||

அப்பாத்துரையம் - 14



() ||- காட்டுகிறார். வடதலையினரே தொண்டை மண்டல மரபுகளாய் பிரிய, கொங்கு வேளாளரும் பிறரும் தென் தலையினரினின்றும் பிரிந்து படர்ந்து பரவினர் என்றும் அவர் வகுத்துரைக்கிறார். இவற்றையடுத்து, வேறு எவ்வகைப் பட்ட மரபு விளக்கங்களிலும் ஆய்வு விளக்கங்களிலும் இறங்காமலே அவர் திடுமெனக் கொங்கு வேளாளரின் வேளாளர் இனப் பொதுத் தலைமை பற்றி ஒரு முடிவு அறிவித்து விடுகிறார்: 'வடதலை வேளாளராகிய துளுவ வேளாளர் (அதாவது தொண்டை மண்டலத் துளுவ வேளாளர்), கொண்டை கட்டி வேளாளர் (கொண்டல் கட்டி வேளாளர் அதாவது தொண்டை மண்டல வேளாளர்), கார்காத்தார் ஆகிய எல்லா வேளாளர்களையும் விடக் கொங்கு வேளாளரே உயர்ந்த மூத்த இனமாகக் கூறப்பட்டது. வேளாள இனத்துக்கே மூத்த குடிமகன், கொங்கு வேளாளப் பெரியன் குலத்தின் தலைவரான வேணாடரே யாவர் இதுவே அறிஞர் விரித்து விளக்க முற்படாது முடிக்கும் முடிவு!

அறிஞர் இங்கே விரிக்காது குறிப்பாக விட்டு விட்ட விளக்கமும் உண்டு. விளக்காமலே முடித்த முடிவும் உண்டு; குடியரசு மரபில் வந்த வேளாண் மரபின் மரபுச் சொற்களாகத் தம்மையறியாமலே சுட்டிச் சென்ற மறைநிலை விளக்கமும்

உண்டு.

முதலாவதாக, வடதலையாருக்குத் தலைமை நிலை யுடையவர் தென்தலையினர் என்றும், அத் தென்தலையாரின் தலைவர் ஆன வேணாடரே கொங்கு வேளாளர் தலைவராத லால் கொங்கு வேளாளர் இருதலை வேளாளருக்கும் தலைவராவார் என்றும், அவர் வாதிடுகிறார் என்பது தெளிவு. விரிக்காது குறிப்பாகத் தெரிவிக்கப்பட்ட விளக்கம் இதுவே ஆகும். ஆனால் தென்தலையின் பொதுமைத் தலைவரான வேணாடர் எவ்வாறு கொங்கு வேளாளரின் சிறப்புத் தலைவராய், அம் மரபினராகவே கருதப்பட்டு வந்துள்ளார் என்பதோ, தாய் மரபான தென்தலைக்குச் சேய் மரபான கொங்கு வேளாளர் மரபு எவ்வாறு தலைமை ஏற்க முடிந்தது என்பதோ விரிக்கப் பெறவில்லை. இதுபோலவே காவிரி தென்தலை வடதலைகளை மட்டுமே குறிப்பிட்டுவிட்டு, பின் தண் பொருநையாறு, பழையாறு ஆகிய ஆற்று வெளிகளுக்குரிய பொதுவான பாண்டி