உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
154 ||

அப்பாத்துரையம் - 14



() ||-


காட்டியபடி கலிங்கம் ஆந்திரம் முதலிய பிற இந்தியப் பகுதிகள் போலவே வேளாண்மையின் முழுமலர்ச்சி காணாது முற்பாதி மலர்ச்சியுடன் நின்று விட்ட வேள்நாடு ஆகும். மற்ற நான்கு வேணாடுகளில், இன்றும் உயிர் மரபுடன் நிலவும் வேணாடுகள் கொங்கு நாட்டின் சோணாட்டு எல்லையிலுள்ள வேணாடும், அதற்கு அடுத்தபடியாக அணிமைக் காலம் வரை வேணாடாய் நிலவியிருந்த இன்றைய நாஞ்சில் நாடும் மட்டுமேயாகும். வற்றிலும் உயிர்மரபுத் தலைமையுடையது முன்னதே. ஐந்தனுள்ளும் இடையேயுள்ள இரு வேணாடுகளும் (பழனி வட்டார, கோவை வட்டார வேணாடுகள்) இன்று நிலவாத பண்டை மரபுகள். அதே சமயம், இவற்றுள் ஒன்றே (கோவை வட்டார வேள்நாடே) வேளாளர் நாடு என்ற முழுநிறை மலர்ச்சிப் பெயரைப் பண்டே கொண்டு விளங்கிற்று. அதுவே ன்னும் உயிர் மரபுடன் எஞ்சியுள்ள குழித்தலை வட்டார, பழனி வட்டார வேணாடுகளின் மூலத்தாயகம் என்பது இதனால் விளக்கம் பெறுவதாகும். சங்க காலத்திய அல்லது சங்க காலத்தினும் முற்பட்ட வேளாண்மை மலர்ச்சியின் தாயகமும், அதன் முழு நிறை மலர்ச்சியின் தாயகமும் நடுமைய வேள் நாடு அல்லது வேளாள நாடே (கோவை வட்டாரமே) என்பதையும்; அதன் மாண்ட மரபுக்குரிய மாளா உயிர் மரபே வேணாடர் என்ற இன்றைய கொங்கு வேளாண் மரபிற்குரிய வேணாடு என்பதையும்; பழனி வட்டாரத்தைப் பழைய வேணாடும், நாஞ்சில் நாட்டு வேணாடும், மைய வேணாட்டிலிருந்து அவரது உயிர் மரபு மலர்ச்சி பெற்ற ஒரு கிளை மலர்ச்சிப் பாதையைக் குறிப்பனவே என்பதையும் இவ் ஒப்பீடுகள் விளக்குகின்றன.

சாதி மரபு வரலாறுகளும் மொழி மரபுகளும் தரும் ஒளிக்கீற்றுகள் இதே மெய்ம்மையை வலியுறுத்தி மேலும் தெளிவு பிறப்பிக்கின்றன.

கொங்கு வேளாளர் தம் தாயக மரபாகப் பற்றார்வத்துடன் சோழ நாட்டையே (அடுத்தபடியாகச் சேர பாண்டிய நாடுகளையே) சுட்டுகின்றனர். அதே சமயம் கொங்கு வேளாளர் உட்படத் தமிழக வேளாள மரபினர் (பல வணிக மரபினர் உள்ளடங்கலாக) யாவருமே தம் முழு இன மரபையும் கங்கை மரபு என்றுதான் குறித்துக்கொள்கின்றனர். கோத்திர மரபு அற்ற