உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 159

அவர்கள் சார்புதலை மாற்றி, வேட்டுவ மரபினருக்கெதிராக வேளாள மரபினர்க்குப் பேராதரவு தர முனைந்தனர், இதில் மூன்றாம் ஊழிக்குரிய புதுச்சமய, புதுப் பண்பாட்டு ஆர்வமும் கலந்திருந்தது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், சோழர்களின் பட்டயங்களிலும், கல்வெட்டுக்களிலும், அவர்கள் கருத்து மரபில் வந்த மரபு வரலாறுகளிலும் நாம் இந்த ஆர்வத்தை, இந்த ஓரச் சார்புகளை முற்றும் காணலாம். மூன்றாம் தள ஊழி அலை தமிழகத்தில் உச்ச நிலையடைந்து வந்த காலங்களில் (கி.பி.15, 16 நூற்றாண்டு முதல்) வடகலை, தென்கலைப் போராட்டங்கள், வலங்கை இடங்கைப் போராட்டங்கள், நாடார்-மறவர் போராட்டங்கள், கேரளத்தில் நாயர்-ஈழவர் போராட்டங்கள், பல இடங்களில் வேளாள மரபினருள்ளேயே சிறுகட்சி, பெருங்கட்சிப் போராட்டங்கள் ஆகியவற்றுடனொப்ப, அதே சமகால ஊழி மரபாகவே, கொங்கு நாட்டில் வேளாளர் வேட்டுவ மரபுப் போராட்டங்கள் ஊக்கி வளர்க்கப்பட்டன. நாட்டுப் பாடல்கள் நமக்குப் பதிவு செய்து வழங்கும் புதிய மாபாரத மரபு இதுவே!

சங்ககாலத்தில் கோ மரபும் ஆய் மரபும் மிக நெருங்கிய இணை மரபுகளாகவே இயங்கி வந்தது காணலாம். பல ஆய் மரபினர் வேள், கோ ஆகிய இரு பட்டங்களும் ஒருங்கே தாங்கியிருந்தனர். தற்காலக் கொங்கு நாட்டுக்கு வடக்கிலும், மேற்கிலும் கிழக்கிலும் இரு மரபுகளும் முற்றிலும் ஒரே மரபாய்

ணைந்திருக்கவேண்டும் என்று கருத இடமுண்டு. ஏனெனில் வடபால் இது யாதவர் ஆட்சி மரபிலேயே தனி வேறுபாடுகளை ஊக்கிற்று. (இதுவும் வட இந்திய, உலக மரபுகளும் அத்திசை களின் தனி ஆய்வுக்குக் குரியன) ஆனால், கொங்கு நாட்டில் மற்ற நாற்றிணை மரபுகளும் வேளாளர் மரபில் முற்றிலும் இரண்டறக் கலந்து இணைந்து, விட்ட பின்னும், பாலைமரபு (மறவர் மரபு) இணையாத தெற்கு வடக்கு கிழக்கு திசைகளிலிருந்து வந்த முடியரசு மரபுகளின் தூண்டுதலே கிட்டத்தட்ட முழு வேளாண்மை மலர்ச்சியும் பெற்று வேளாளர் மரபாகவே மாறியிருந்த வேட்டுவ மரபைத் தனித்து நின்று சமுதாய தளத்திலேயே குடியரசுப் போட்டி நிகழ்த்த வைத்துள்ளது

என்னலாம்.