உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
162 ||

அப்பாத்துரையம் - 14



||-


கியுள்ளன என்பதை இதுவும்; இது போன்ற அவர்களின் பிற பொது மலர்ச்சிப் பண்புக் கூறுகளும் (தமிழ்: மழவர்-வீரர், உழவர்) காட்டும்.

நாடுகளிடையே கொங்கு நாட்டுக்கு மட்டுமே தனிப் பெருஞ் சிறப்பாய் அமைந்துள்ள தனித் தன்மை அல்லது கொங்குத் தன்மை என்பது (கொங்கன், தனித்தன்மையுடையவன், தனித்திருவிளையாடல் புரிபவன், முருகன் அல்லது மதுரைச் சொக்கனாகிய சிவபெருமான்) உண்மையில் கொங்கு வேளாளர்- வேட்டுவர் இணைமரபின் தனித் தன்மை ஆகும். அதுவே நாகரிக உலகின் வேளாண்மை மலர்ச்சிக்குரிய முழு நிறைவுத் தன்மையின் நாடு நோக்கிய, உலக நோக்கிய அகலவிரிவின் உயிர்விதைப் பண்பு என்னலாம்.

கொங்கு வேளாளப் பெருங்குடி மக்களும் கொங்கு வேட்டுவப் பெருங்குடி மக்களும் வேறு வேறு நாட்டவர், மரபினர், பண்பினர் என்பதோ, அவர்களில் எம் மரபினரேனும் மற்ற மண்டலங்களைத் தாயகமாகக் கொண்டு அங்கிருந்து குடியேறியவர் அல்லது குடியேற்றப் பட்டவர் என்பதோ

வ்வாறு தமிழ் மரபு, வரலாற்றுமரபு, மொழி மரபு, நாகரிக மரபு. ஆகிய அனைத்துக்கும் முரண்பட்ட மருண்ட நோக்கின் விளைவேயாகும். இது போலவே கொங்கு வேளாள மரபு சோழ நாட்டு வேளாள மரபையோ, பிற வேளாள மரபுகளையோ (பண்டை வட கொங்கு, மேல் கொங்குப் பரப்புகளிலுள்ள மரபுகளையோ கூட) தாய்மரபு அல்லது தாய்மரபுகளாகக் கொண்டது என்று கொள்வதும், கருதுவதும் முற்றிலும் தவறே ஆகும். இவற்றை மேற்கண்ட வேளாண்மை மலர்ச்சி விளக்கம் காட்டும். உண்மையில் கொங்கு வேளாள மரபு தென்னகமெங்கு முள்ள எல்லா வேள்மரபு, வேளாளர் மரபுகளுடனும் தொடர்புடைய ஆனால், அவற்றிற் கெல்லாம் மலர்ச்சித் தாயகமான, மலர்ச்சி நிறைவான ஆதி வேளாண் மரபும் முழு வேளாண் மரபும் ஆகும். இது மட்டுமன்று; கொங்கு வேளாளர். வேளாளர் இனத்துக்குமட்டுமன்று; பிராமணரையும் பிறரையும் உள்ளடக்கிய எல்லாத் தமிழ், தென்னக, இந்திய மரபுகளுக்கும் மூலமான குடியரசு மரபின் நேர்வழி மலர்ச்சிக் கான்முளை மரபினரே யாவர்.