உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 171

ஏனெனில், அம் முயற்சியின் முதற்கட்டத்தில் மோரியர் நேரடியாகத் தமிழகத்தைத் தாக்க முற்படவில்லை. தமிழக அரசுகளிடையே ஓர் எல்லைப்புற அரசையே தம் நேச அரசாக்கிக்கொண்டு, அந் நேச அரசைத் தூண்டி மற்றத் தமிழக அரசுகளைத் தாக்கிவிட்டது. இதில் தோல்வியுற்ற பிறகே அவர்கள் நேரடித் தாக்குதலுக்கான பெரும்படி ஏற்பாடுகளில் முனைந்தனர். பெருந்தமிழக எல்லையிலுள்ள மலைகளிலும் கணவாய்களிலும் அவர்கள் தேர்கள் ஆண்டுக்கணக்காக உருண்டு பெரும் படைகள் செல்வதற்குரிய மலைப்பாறைகளை உடைத்துக் கணவாய்ப்பாதைகள் அமைத்தும், ஆங்காங்கே படை காவல் தளங்கள் நிறுவியும் வந்தனர்.

ஆண்டாண்டாக நடைபெற்று வந்த இப்பெரு முயற்சி களால் தமிழர் வாழ்விலும் தமிழக மக்கள் உணர்விலும் ஏற்பட்ட அதிர்வுகளை உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், மாமூலனார் போன்ற சங்கப் புலவர்கள் நம் வரலாற்றுச் செவிப்புலனில் படும்படி எடுத்துக் காட்டியுள்ளனர்.

‘விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைந்த

.............................

‘மாகெழுதானை வம்ப மோரியர்

(அகம் 69)

புனைதேர் நேமி உருளிய குறைந்த

அறைவாய்’

(அகம் 251)

-

இங்கே வம்ப மோரியர் (வம்பு புதுமை) என்பது, புதிய மரபினரான மோரியர் என்னும் பொருளுடையது. தமிழருக்கு நெடுங்காலம் பழக்கப்பட்ட சிசுநாகர் மரபு, நந்தர் மரபு ஆகியவற்றை ஒழித்து புதிது வந்த மரபு என்பதனை இது காட்டுகிறது. ‘பொன்புனை திகிரி' 'புனை தேர் நேமி' ஆகியவை பேரரசின் தேர்களுக்குரிய உறுதி வாய்ந்த இரும்புச் சக்கரங்களைக் குறிக்கின்றன (திகிரி, நேமி - சக்கரம்).

ஏவி

தமிழக அரசுகளுக்கு எதிராக அசோகனால் விடப்பட்ட தமிழக வல்லரசு ஒரு முடியரசு அன்று - தமிழக மூவரசுகளுக்கும் வடதிசை மோரிய கலிங்கப் பேரரசுகளுக்கும்