உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
190 ||

அப்பாத்துரையம் - 14



|| தற்பெருமைமிக்க தொண்டமான் பளபளப்பாக ஒளிவீசும் தன் பாரிய படைக்கலக் கொட்டிலைத் தூதருக்குக் காட்ட முனைந்தபோது, அக் கவிஞர் பெருமாட்டி ‘ஆம்! இவையே அழகானவை, அப்படியே புத்தம் புதிதாக நெய் பூசப்பெற்றுப் பளபளக்கின்றன. என் தலைவனோ தான் உண்ணாமலே புலவர்களுக்குக் கொடுத்து வாடுபவன். அவன் படைக் கலங்களோ முற்றிலும் போரில் ஒடிந்தும் குருதி படிந்து துருப்பிடித்தும் கிடப்பவை' என்று நா நயம்படக் கூறி அவனை இணக்குவித்து அவன் ஆர்வ நேசம் பெற்றார்! அதன்பின் உயிர் நண்பன் ஓரியின் உதவியுடன் அதியமான் காரியின் நாட்டைக் கைப்பற்றினான்.

காரி, கொங்குப் பேரரசன் பெருஞ்சேரலிரும்பொறையை அணுகி, அவன் உதவியால் அதியமானின் துணையையும் மீறி, ஓரியை முறியடித்துக்கொன்றான். அதன் பின் சோழ பாண்டியர் உதவிய நிலையிலும் அதியமான் நெடுமான் அஞ்சியும் அவன் வீரப்படைத்தலைவன் பெரும்பாக்கனும் அவர் வீரப்புதல்வன் பொகுட்டெழினியும் கொங்குச் சேரனை எதிர்த்துத் தகடூர்ப் பெரும் போரில் மாண்டனர்.

நமக்கு அரைகுறையாகவே கிட்டியுள்ள சங்க காலக் கொங்கு நாட்டுப் பெருங்காப்பியமாகிய தகடூர் யாத்திரை, பல ஆண்டுகள் நீடித்த இத் தமிழகப் பெரும்போரைச் சங்ககாலப் புலவரின் நேரடிக் காட்சியாகவே வருணித்துள்ளது.

இப் போர் வெற்றியாலேயே, கொங்குச் சேரன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற விருதுப் பெயர் பெற்றான்.

கொல்லிமலை என்ற வேள்புலம், பண்டைத் தென் கொங்கு நாடாகிய இன்றைய கொங்கு நாட்டின் புகழ் சான்ற மரபு ஆகும். அது கொல்லிமலை என்ற மலையினாலேயே அப் பெயர் பெற்றது. அது கொல்லி நாடு என்றும் கொல்லிக் கூற்றம் என்றும் அழைக்கப் பெறுவதுண்டு. அதன் வேளிர், ஓரி என்ற குடிப் பெயரால் சுட்டப்பட்டனர். கொல்லிமலை இப்போது சதுரகிரி என அழைக்கப்படுகிறது. அது 180 சதுரக் கல் பரப்பு உடையது. அதன் மிக உயரிய கொடுமுடியான வேட்டைக்காரன் மலை 4663 அடி உயரம் உடையது. அறப்பளீசுரம் என்ற கோயிலும்